சினிமா

நயன்தாரா படத்துக்கு நான் இசை அமைக்கவில்லை - யுவன் சங்கர் ராஜா

Published On 2019-03-24 13:51 IST   |   Update On 2019-03-24 13:51:00 IST
நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படத்திற்கு நான் இசையமைக்க வில்லை என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூறியிருக்கிறார். #YuvanShankarRaja
‘உன்னைப்போல் ஒருவன்’, ‘பில்லா 2’ படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்க, நயன்தாரா கதாநாயகியாக நடித்த திரைப்படம் ‘கொலையுதிர் காலம்’. ஆரம்பத்தில் யுவன் ‌ஷங்கர்ராஜா, பாலிவுட்டின் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான பூஜா என்டர்டெயின்மென்ட்டுடன் இணைந்து படத்தைத் தயாரிப்பதாக இருந்தது. பின்பு பல காரணங்களால் படத்தை முடிக்காமலேயே யுவன் தயாரிப்பை கை விட்டார்.

முழுக்க முழுக்க இங்கிலாந்திலேயே நடத்தி முடிக்கப்பட்டுள்ள படப்பிடிப்பில், இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே ஷூட்டிங் மிச்சம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. பின்னர் இப்படத்தை தெலுங்கு மற்றும் இந்தியில் தமன்னா, பிரபு தேவா ஆகியோரை வைத்துத் தொடர இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

படம் வெளிவருமா என்று சந்தேகம் நிலவி வந்த நிலையில் எட்செட்ரா என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் படத்தின் தமிழ் உரிமையைப் பெற்றார்.



நேற்று படத்தின் இயக்குநர் சக்ரி, நடிகை நயந்தாரா, இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா யாரும் இல்லாமல் ஒரு டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. டிரைய்லர் வெளியான சில மணிநேரத்தில் படத்துக்கு நான் இசையமைக்கவில்லை என யுவன் சங்கர் ராஜா ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

புதிதாக வந்த தயாரிப்பாளருக்கும் யுவனுக்கும் பேச்சுவார்த்தை இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம் எனப் படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News