சினிமா

இளையராஜா விழாவில் ரஜினி, கமல் பங்கேற்பு

Published On 2019-01-19 15:38 IST   |   Update On 2019-01-19 15:38:00 IST
தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கொண்டாடப்படும் இசையராஜா 75 நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் பங்கேற்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Ilayaraja75 #Rajinikanth #KamalHaasan
இசையமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் தமிழ் திரைத்துறையினர் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக, ‘இளையராஜா 75’ எனும் இசை நிகழ்ச்சியுடன் கூடிய விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இந்த விழா நடைபெற உள்ளது. 2-ந் தேதி தென்னிந்தியத் திரையுலகின் முக்கியப் பிரபலங்கள் கலந்து கொள்ளும் கலை நிகழ்ச்சியும், 3-ந் தேதி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.



இந்த விழாவுக்கு திரையுலகின் முன்னணி பிரபலங்களை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்கள். ரஜினி மற்றும் கமல் இருவரையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். இருவருமே கண்டிப்பாக வருவதாக உறுதியளித்துள்ளனர். #Ilayaraja75 #Rajinikanth #KamalHaasan

Tags:    

Similar News