சினிமா

வசூலில் சாதனை படைத்த ரஜினியின் 2.0 - சர்கார் வசூலை முந்தியது

Published On 2018-11-30 08:40 GMT   |   Update On 2018-11-30 08:40 GMT
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் 2.0 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படத்தின் வசூல் சர்கார் வசூலை முந்தியுள்ளது. #2Point0 #2Point0BoxOfficeCollection #2Point0Record
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. சுமார் ரூ.550 கோடி பொருட்செலவில் உருவான இப்படம் வசூலில் சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரிலீசான பெரும்பாலான தியேட்டர்களில் முதல் நான்கு நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.

2.0 படம் சென்னையில் மட்டும் ரூ. 2.64 கோடி வசூல் செய்துள்ளது. இது சர்கார், மெர்சல், விவேகம், காலா ஆகிய படங்களைவிட அதிகம். இதன்மூலம் சர்காரின் முதல் நாள் வசூல் சாதனையை 2.0 முறியடித்துள்ளது. விஜய் நடித்த சர்கார் படம் சென்னையில் முதல் நாள் ரூ. 2.37 கோடி வசூலித்தது.



சென்னையில் ரிலீசான அன்றே அதிகம் வசூல் செய்த படமாக சர்கார் இருந்தது. அந்தப்படம் தீபாவளி அன்று ரிலீஸாகி அதிகம் வசூலித்தது. 2.0 பண்டிகை இல்லாத வார நாளில் வெளியாகி அந்த சாதனையை முறியடித்துவிட்டது.

2.0 படம் இந்தியில் சுமார் ரூ. 25 கோடி வரை வசூலித்திருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ரிலீசான இரவு 10 மணி வரை ரூ. 2 கோடி வசூல் செய்துள்ளது. நியூசிலாந்தில் ரூ. 11.11 லட்சமும், ஆஸ்திரேலியாவில் ரூ. 58.46 லட்சமும் வசூல் செய்துள்ளது. வார இறுதி நாட்களில் பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



உலகம் முழுவதும் சுமார் 10,000 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகி இருக்கிறது. மொத்தமாக கணக்கிட்டால் முதல் நாள் வசூல் பல கோடிகளை தாண்டும் என்கின்றனர். தோராயமாக ரூ.60 முதல் ரூ.65 கோடி ரூபாய் வரை வசூலித்திருக்கக் கூடும் என கணக்கிடுகின்றனர்.

2.0 படம் கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்து இருப்பதால் குழந்தைகளை அதிகமாக கவருகிறது. எனவே, படத்தை பார்த்த ரசிகர்கள் மீண்டும் குடும்பத்துடன் பார்ப்பதற்காக டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து வருகிறார்கள்.

அடுத்த சில நாட்களுக்கான முன்பதிவும் தொடங்கிய சில மணிநேரங்களிலேயே முடிந்துவிடுகிறது. #2Point0 #2Point0BoxOfficeCollection #2Point0Record

Tags:    

Similar News