சினிமா

அறம் 2 - மக்கள் இயக்கத்தை துவங்கும் நயன்தாரா

Published On 2018-11-10 16:00 IST   |   Update On 2018-11-10 16:00:00 IST
கோபி நயினார் இயக்கத்தில் உருவாகும் அறம் 2 படத்தில், நயன்தாரா தனது கலெக்டர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்கள் இயக்கம் துவங்கி போராடுவதே படத்தின் கதைக்களமாக வைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Aramm2
கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடித்திருந்த படம் அறம். விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றதுடன் வணிக ரீதியாகவும் வெற்றிபெற்றது.

அதன்பிறகு அறம் 2 திரைப்படம் எடுக்க உள்ளதாக கோபி நயினார் அறிவித்திருந்தார். இப்படத்தில் நயன்தாரா புதிதாக மக்கள் இயக்கம் ஒன்று துவங்கி மக்களுக்காக போராட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாவட்ட ஆட்சியர் மதிவதனியாக இருக்கும் நயன்தாராவின் தொடர்ச்சியான நேர்மையான செயல்பாடுகளால் அரசியல்வாதிகள் அவதிக்குள்ளாகிறார்கள். பிறகு அவர்களின் சதியினால் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். அதனால் ஆத்திரமடையும் நயன், கலெக்டர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்களுக்காக ஒரு இயக்கம் தொடங்கி போராடுகிறார். இதுதான் அறம் 2 திரைப்படத்தின் கதை என சொல்லப்படுகிறது.



அறம் 2 திரைப்படத்தின் மூலம் படத்தின் கரு அடுத்த தளத்திற்கு மேம்பட்டு சமூக பிரச்சனைகளை நிச்சயம் பேசும் என நம்பலாம். #Aramm2 #Nayanthara

Tags:    

Similar News