சினிமா

நானும் மரண வெயிட்டிங் தான் - நோட்டா படவிழாவில் விஜய் தேவரகொண்டா பேச்சு

Published On 2018-09-27 15:56 GMT   |   Update On 2018-09-27 15:56 GMT
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் நோட்டா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் விஜய் தேவரகொண்டா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்திற்காக நானும் மரண வெயிட்டிங் என்று கூறினார். #NOTA #VijayDevarakonda
ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘நோட்டா.’ ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவரகொண்டா இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். நாயகியாக மெஹ்ரீன் பிர்சாடா, சன்சனா நடராஜன் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் சத்யராஜ். நாசர், எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ள இந்தப்படத்தை அரிமாநம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார்.

சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் தேவரகொண்டா, சத்யராஜ், சன்சனா மற்றும் பிக்பாஸ் புகழ் யாஷிகா, நாசர், எம்.எஸ்.பாஸ்கர், இயக்குநர் ஆனந்த் சங்கர், இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., படத்தொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

விழாவில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பேசும்போது, “ஆனந்த் சங்கரை பொறுத்தவரை பாடல்களை குறைத்து பின்னணி இசையில் கவனம் செலுத்துவார். எனக்கும் அதே அலைவரிசை என்பதால் எளிதாக செட்டாகி விட்டோம். இந்தப்படத்தின் பின்னணி இசையை கவனிப்பவர்கள், இவர் வித்தியாசமான முயற்சிகளை பண்ணுவார் என என்மீது நம்பிக்கை வைக்க ஆரம்பிப்பார்கள். நாம் எதிர்கொண்ட, நம்மை பாதித்த விஷயங்களை இதில் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு குறையாமல் சொல்லியிருக்கிறார் இயக்குனர்” என்றார்.



நாயகன் விஜய் தேவரகொண்டா பேசும்போது, “முதல் பத்திரிகையாளர் சந்திப்பின்போது மற்றவர்கள் பேசுவது எதுவும் புரியாத நிலையில் அதை கவனிக்காமல், எண்ணித் துணிக கருமம் என்கிற திருக்குறளை திரும்பத் திரும்ப மனப்பாடம் பண்ணிக்கொண்டு இருந்தேன். ஆனால் இப்போது தமிழில் நானே திருக்குறள் ஒப்பிக்கும் அளவுக்கு வந்துவிட்டேன். இயக்குனர் ஆனந்த் சங்கருடன் பணியாற்றியது ரொம்ப ஈஸியாக இருந்தது. இந்தப்படம் குறித்து டிவிட்டரில் அடிக்கடி மரண வெயிட்டிங் என கமெண்ட் போடப்பட்டு இருந்தது. அதேபோல நானும் இந்தப்படத்திற்காக மரண வெயிட்டிங். இந்த படத்தின் மூலம் தமிழ் மக்களின் மனதை வெல்ல வேண்டும் என்பதுதான் என் ஆசை.” என்றவர் ‘சொன்னது போலவே திருக்குறள் ஒன்றை அழகாக உச்சரித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

இந்தப்படம் வரும் அக்-5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. #NOTA #VijayDevarakonda

விஜய் தேவரகொண்டா பேசிய வீடியோவை பார்க்க:

Tags:    

Similar News