சினிமா

இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்

Published On 2018-09-07 03:05 GMT   |   Update On 2018-09-07 03:05 GMT
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'எந்திரன்' படத்தின் கதை தொடர்பான வழக்கில் இறுதி விசாரணை தேதியை சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. #Enthiran #Shankar
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘எந்திரன்’.

இந்த படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் கடந்த 2010-ம் ஆண்டு சிவில் வழக்கும், காப்புரிமையை மீறியதாக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு மற்றொரு வழக்கையும் ஐகோர்ட்டில் தொடர்ந்திருந்தார். 

அதில், ‘1996-ம் ஆண்டு ‘ஜூகிபா’ என்ற தலைப்பில் உதயம் என்ற பத்திரிகையில் தொடர் கதை எழுதினேன். அந்த கதையை என்னிடம் அனுமதி பெறாமல், இயக்குனர் ஷங்கர், ‘எந்திரன்’ என்ற தலைப்பில் படமாக எடுத்துள்ளார். எனவே, எனக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.



இதில் சிவில் வழக்கின் முந்தைய விசாரணையின் போது, வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் கால அவகாசம் கோரிய இயக்குநர் ஷங்கருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி விசாரணையை 12-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதில், ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கோரிய வழக்கு, நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எட்டு ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி, தமிழ்நாடனின் கதை நகலை தாக்கல் செய்தார். மேலும், சிவில் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத இயக்குனர் சங்கருக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதையும் சுட்டிக் காட்டினார். இதையடுத்து வழக்கின் இறுதி விசாரணையை, வரும் 28 ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். #Enthiran #Shankar #Rajinikanth

Tags:    

Similar News