சினிமா

அந்த வேடம் வேண்டாம் என்றிருந்தேன், விஜய் என்னை நடிக்க வைத்துவிட்டார் - ஐஸ்வர்யா ராஜேஷ்

Published On 2018-08-20 07:48 GMT   |   Update On 2018-08-20 07:48 GMT
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ், அம்மா கதாபாத்திரம் கொஞ்ச நாள் வேண்டாம் என்றிருந்தேன், ஆனால் கதை பிடித்திருந்ததால் லக்‌ஷ்மி படத்தில் நடித்ததாக கூறினார். #AishwaryaRajesh #Lakshmi
விஜய் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் லக்‌ஷ்மி. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், ‘பேபி’ தித்யா, கோவை சரளா, கருணாகரன் எனப் பலரும் நடித்துள்ளனர்.

காக்கா முட்டை, ஆறாது சினம் படங்களை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் இதில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது “பல படங்களில் அம்மா கதாபாத்திரம் பண்ணிட்டோம், கொஞ்ச நாள் அதெல்லாம் விட்டுட்டு கமர்ஷியல் ஹீரோயின் ரோல் பண்ணலாம்னு தான் இருந்தேன். தயக்கத்தோடு தான் விஜய் சாரிடம் கதை கேட்டேன். கதை பிடிச்சது ஒத்துக்கிட்டேன். பிரபுதேவா சார் ஒரு லெஜெண்ட். அவரோடு நடிக்கிறது ரொம்ப பெருமையா இருந்தது.



நடிகர், நடன இயக்குநர் எல்லாத்தையும் தாண்டி அவரிடம் நல்ல நகைச்சுவை உணர்வு இருந்தது. லட்சுமி படத்தில் வேலை செஞ்ச எல்லாக் குழந்தைகளும் மிகவும் திறமைசாலிகள். படம் கண்டிப்பா குழந்தைகளுக்கு ஒரு இன்ஸ்பிரேஷனா இருக்கும்” என்றார். #AishwaryaRajesh #Lakshmi

Tags:    

Similar News