சினிமா

தனுஷ், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் மோதல்

Published On 2018-07-26 12:55 IST   |   Update On 2018-07-26 12:55:00 IST
தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா, சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தின் அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருவதால், இருவரது ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மோதி வருகின்றனர். #Dhanush #Sivakarthikeyan
சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தின் டீஸர், பாடல்கள் வெளியீடு குறித்த அறிவிப்பை கடந்த இருபதாம் தேதி மாலை ஏழு மணிக்கு வெளியிட்டனர். அடுத்த அரை மணிநேரத்தில் தனுசின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் புதிய லோகோ வெளியீடு குறித்த அறிவிப்பு வந்தது. 

அதனைத் தொடர்ந்து இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் மோதல் தொடங்கியது. டுவிட்டர் ட்ரெண்டிங்கில் இரு நடிகர்களின் ரசிகர்களும் பல்வேறு ஹேஷ்டேக்குகளுடன் நீயா நானா போட்டியை ஆரம்பித்தனர். அது இன்னும் முடியவில்லை. கெளதம் அதனை விசிறி விட்டிருக்கிறார். சீமராஜா படத்தின் வாரேன் வாரேன் சீமராஜா பாடலை நேற்று வெளியிட்டார்கள். சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதனை டுவிட்டரில் டிரெண்டாக்கினார்கள். இந்நிலையில் ஏற்கனவே, வெளியான எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் விசிறி பாடலின் இன்னொரு வடிவத்தை நாளை வெளியிடுவதாக கெளதம் அறிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தனுஷ் ரசிகர்கள் இணையத்தில் சுறுசுறுப்படைந்துள்ளனர். 

முன்பு நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே போஸ்டர் யுத்தம் நடக்கும். படம் வெளியாகும் போது எந்த நடிகரின் கட்அவுட் உயரமானது என்ற போட்டி எழும். இப்போது அது டுவிட்டர் யுத்தமாக மாறியிருக்கிறது. #Dhanush #Sivakarthikeyan
Tags:    

Similar News