சினிமா

கதாநாயகனாக அறிமுகமாகும் விஜய், அஜித் பட நடிகர்

Published On 2018-06-13 13:38 GMT   |   Update On 2018-06-13 13:38 GMT
தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சிம்பு ஆகியோர் படங்களில் நடித்த பிரபல நடிகர் தற்போது கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார். #Yakan #Mahat
அஜித் நடிப்பில் வெளியான ‘மங்காத்தா’ படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் மஹத். இப்படத்தின் மூலம் பலருடைய கவனத்தையும் ஈர்த்தார். இப்படத்திற்குப் பிறகு விஜய்யுடன் ‘ஜில்லா’ படத்தில் அவருக்கு தம்பியாக நடித்தார். இதையடுத்து சென்னை 28 இரண்டாம் பாகம், சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார். இவர் கதாநாயகனாக நடிக்கும் முதல் படத்திற்கு ‘யகன்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். தினேஷ் பார்த்தசாரதி இயக்கும் இப்படத்திற்கு அஜ்மல் கான் இசையமைக்கிறார்.



இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. ஆக்‌ஷன் திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. #Mahat #Yakan
Tags:    

Similar News