சினிமா

7 வருடங்களுக்கு முன்பு இந்த நாளை மறக்க முடியாது - சௌந்தர்யா ரஜினிகாந்த்

Published On 2018-05-28 15:46 GMT   |   Update On 2018-05-28 15:46 GMT
நடிகர் ரஜினிகாந்த்தின் இரண்டாவது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த், 7 வருடங்களுக்கு முன்பு இந்த நாளை மறக்க முடியாது என்று கூறியிருக்கிறார். #Kaala #Rajinikanth
ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’. இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கிறார். இப்படம் ஜூன் 7ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய டிரைலர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல், இன்று காலா படத்தின் எமோஜி வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் காலா என்ற ஹேஷ் டேக்குக்கு எமோஜி வடிவமைக்கப்பட்டுள்ளது. டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள காலா எமோஜிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 



இந்த நாளையும் 7 வருடங்களுக்கு முன்பு இதே நாளையும் என்னால் மறக்க முடியாது என்று சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார். 7 வருடங்களுக்கு முன்பு 28-5-2011 அன்றைய தினத்தில் அப்பா உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றார். கடவுளின் அருளால் நல்ல ஆரோக்கியத்துடன் சில தினங்களில் உயிர் திரும்பினார். மக்களின் பிரார்த்தனைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி. 7 வருடங்களுக்கு பின்பு இன்று உங்கள் அன்புடன் காலா கொண்டாட்டம்’ என்று சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
Tags:    

Similar News