சினிமா செய்திகள்

ரஜினியின் ஸ்பெஷல் க்ளிம்ஸ் வீடியோ... சௌந்தர்யா ரஜினிகாந்த் கொடுத்த முக்கிய அப்டேட்!

Published On 2025-12-07 20:02 IST   |   Update On 2025-12-07 20:02:00 IST
  • வில்லனாக அறிமுகமாகி, தற்போது ஒட்டுமொத்த திரையுலகையும் தன்னை சூப்பர் ஸ்டார் என அழைக்க வைப்பவர்
  • விரைவில் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகும்

வில்லனாக அறிமுகமாகி, தற்போது ஒட்டுமொத்த திரையுலகையும் தன்னை சூப்பர் ஸ்டார் என அழைக்க வைப்பவர்தான் நடிகர் ரஜினி. ரஜினிகாந்த் திரையில் அறிமுகமாகி இந்தாண்டோடு ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்தன. இதற்கு பல பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த திரைசாதனையை கொண்டாடும் வகையில், அவரது பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி, அவரது 'படையப்பா'  படம் மீண்டும் திரையரங்குகளில் புதிய பொலிவுடன் திரையிடப்படுகிறது.

இந்த தகவலை சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும் படையப்பா படம் தொடர்பான தனது அனுபவங்களை ரஜினி பகிர்ந்துகொள்ளும் ஒரு சிறப்பு க்ளிம்ப்ஸ் வீடியோவும் இன்று மாலை வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தார். ஆனால் வீடியோ வெளியாகவில்லை. இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறால் வீடியோ வெளியாக தாமதமாவதாக தெரிவித்துள்ளார். விரைவில் வீடியோ வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 


Tags:    

Similar News