'கேம் ஆஃப் லோன்ஸ்'- திரைவிமர்சனம்
ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகிறார் கதையின் நாயகன் நிவாஸ் ஆதித்தன். ஒரு கட்டத்தில் ஆன்லைன் ஆப் மூலம் கடன் வாங்குகிறார். இதனால், எதிர்பாராத விபரீதத்தை சந்திக்கிறார்.
இந்த கடனில் சூழல் என்ன ?, அதில் இருந்து அவர் தப்பித்தாரா? இல்லையா? என்பது படத்தின் மீதிக்கதை..
நடிகர்கள்
கதையின் நாயகன் நிவாஸ் ஆதித்தன், உணர்வுப்பூர்வமாக நடித்துள்ளார். அளவாக நடித்து தனது கதாபாத்திரத்திற்கும், திரைக்கதைக்கும் பலம் சேர்த்திருக்கிறார். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபிநய், நாயகனுக்கு இணையாக கவனம் ஈர்க்கிறார்.
ஆத்விக், எஸ்தர் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம்.
இயக்கம்
ஒரு சம்பவத்தின் மூலம் பல உண்மைகளை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் அபிஷேக் லெஸ்லி. உண்மை சம்பவத்தின் பின்னணியில், அதிர்ச்சிகரமான கற்பனை மூலம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்த முயற்சிக்கிறார். ஆங்காங்கே படத்தின் ஓட்டத்தில் வரும் தொய்வு படத்திற்கு பலவீனம். கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
இசை
படத்தின் பின்னணி இசை பாராட்டக்கூடியது.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் சபரி நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
ரேட்டிங்- 1.5/5