சினிமா செய்திகள்

நிர்வாகம் பொறுப்பல்ல- திரைவிமர்சனம்

Published On 2025-12-07 14:48 IST   |   Update On 2025-12-07 14:48:00 IST
ஸ்ரீகாந்த் தேவாவின் இசை குத்தாட்ட பாடலுக்கு ஆட்டம் போட வைக்கிறது.

நாயகன் கார்த்தீஸ்வரன், பல வழிகளில் மோசடி செய்து ரூ.5 ஆயிரம் கோடி சம்பாதிக்கிறார். அந்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு தப்பித்து விட நினைக்கும் போது, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிதியிடம் சிக்கிக் கொள்கிறார்.

இறுதியில் போலீஸிடம் சிக்கிக் கொண்ட கார்த்தீஸ்வரன் தப்பித்தாரா? கார்த்தீஸ்வரன் செய்த மோசடிகள் என்ன? மோசடி செய்ய என்ன காரணம்? என்பதே படத்தின் மிதிக்கதை.

நடிகர்கள்

படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கும் கார்த்தீஸ்வரனே படத்தை இயக்கவும் செய்து இருக்கிறார். பெண் போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ஸ்ரீநிதி விசாரணை நடத்தும் காட்சிகளில் கவனிக்க வைத்து இருக்கிறார். கார்த்தீஸ்வரன் நண்பர்களாக ஆதவன், அகல்யா வெங்கடேசன் மற்றும் லிவிங்ஸ்டன், பிளாக் பாண்டி ஆகியோர் கொடுத்த வேலையை செய்துள்ளனர்.

இயக்கம்

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் அதிகரித்துக் கொண்டுதான் இருப்பார்கள் என்பதை படத்தில் விழிப்புணர்வோடு சொல்லி இருக்கிறார் இயக்குனர் கார்த்தீஸ்வரன்.

சொல்ல வந்த கதையை இன்னும் கூடுதலாக அழுத்தமாக சொல்லி இருக்கலாம். மோசடி செய்யும் காட்சிகளை பார்க்கும் போது செல்போனை தொடுவதற்கே பயமாக இருக்கிறது. தினமும் ஆன்லைன் மோசடியில் சிக்கி பணத்தை பறிகொடுக்கும் மக்களின் பரிதாப நிலையை அப்படியே சொல்லி இருக்கிறார்.

இசை

ஸ்ரீகாந்த் தேவாவின் இசை குத்தாட்ட பாடலுக்கு ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசையை அதிக இரைச்சலுடன் கொடுத்து இருக்கிறார்.

ஔிப்பதிவு

என்.எஸ்.ராஜேஷ் ஒளிப்பதிவில் காட்சிகளை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

ரேட்டிங்- 2.5/5

Tags:    

Similar News