ஆட்டோமொபைல்
கோப்பு படம்

ஜெனீவா மோட்டார் விழாவில் அறிமுகமாகும் டாடா மைக்ரோ எஸ்.யு.வி. கான்செப்ட்

Published On 2019-01-03 10:59 GMT   |   Update On 2019-01-03 10:59 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹான்பில் என்ற பெயரில் புதிய மைக்ரோ எஸ்.யு.வி. கார் கான்செப்ட் மாடலை ஜெனீவா மோட்டார் விழாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #TataMotors



டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புத்தம் புதிய மைக்ரோ எஸ்.யு.வி. கான்செப்ட் காரினை 2019 ஜெனீவா மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

புதிய மைக்ரோ எஸ்.யு.வி. கார் ஹான்பில் என அழைக்கப்படுகிறது. புதிய கான்செப்ட் தவிர டாடா மோட்டார்ஸ் ஐந்து புதிய வாகனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. டாடா ஹான்பில் மைக்ரோ எஸ்.யு.வி. கார் இந்தியாவில் மஹிந்திரா கே.யு.வி. 100 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.

டாடா ஹான்பில் கார் அந்நிறுவனத்தின் ஆல்ஃபா மாட்யூலர் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் என கூறப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 45 எக்ஸ் ஹேட்ச்பேக் மாடலும் இதேபோன்று உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. டாடா மோட்டார்ஸ் தனது ஹான்பில் மாடலின் டீசரை 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் வெளியிட்டது.


கோப்பு படம்

வடிவமைப்பை பொருத்த வரை டாடா ஹான்பில் இம்பேக்ட் 2.0 வடிவமைப்பில் உருவாகும் என கூறப்படுகிறது. இதேபோன்ற வடிவமைப்பு டாடா தனது ஹேரியர் எஸ்.யு.வி. மாடலில் வழங்கியிருந்தது. டாடா நெக்சான் போன்று புதிய ஹான்பில் கார் வித்தியாசமான தோற்றம் கொண்டிருக்கும் என தெரிகிறது.

இத்துடன் புதிய மைக்ரோ எஸ்.யு.வி. மாடலில் பெரிய வீல் ஆர்ச்கள், மிதக்கும் ரூஃப் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்த வரை 1.2 லிட்டர், 3-சிலிண்டர் ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம்.
Tags:    

Similar News