கார்

கார் மாடல்களுக்கு ரூ. 1.25 லட்சம் வரையிலான தள்ளுபடி - மஹிந்திரா அசத்தல்

Published On 2023-09-13 13:02 GMT   |   Update On 2023-09-13 13:02 GMT
  • மஹிந்திரா தார், ஸ்கார்பியோ N, XUV700 போன்ற மாடல்களுக்கு எந்த பலன்களும் வழங்கப்படவில்லை.
  • மஹிந்திரா மராசோ மாடலுக்கு ரூ. 73 ஆயிபம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மஹிந்திரா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அசத்தல் தள்ளுபடி மற்றும் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. சலுகை மற்றும் தள்ளுபடிகள் XUV400, மராசோ, XUV300, பொலிரோ மற்றும் பொலிரோ நியோ மாடல்களுக்கு வழங்கப்படுகிறது. தார், ஸ்கார்பியோ N, XUV700 போன்ற மாடல்களுக்கு எந்த பலன்களும் வழங்கப்படவில்லை.

சலுகைகளின் படி XUV400 மாடலுக்கு ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் மஹிந்திரா XUV400 மாடல் EC மற்றும் EL என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை முறையே 375 மற்றும் 456 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகின்றன. இவற்றின் முன்புறம் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 150 ஹெச்.பி. பவர், 310 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

 

மஹிந்திரா மராசோ மாடலுக்கு ரூ. 73 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த மாடல் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இது 123 ஹெச்.பி. பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

மஹிந்திரா XUV300 மாடலுக்கு வேரியண்ட்களை பொருத்து ரூ. 46 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 71 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. பொலிரோ நியோ மாடலுக்கு ரூ. 35 ஆயிரம் வரையிலான தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன. மஹிந்திரா பொலிரோ மாடலுக்கு ரூ. 60 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. 

Tags:    

Similar News