கார்

ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் ஸ்பெஷல் வேரியண்ட் அறிமுகம்

Update: 2023-03-15 10:41 GMT
  • ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் கிராண்ட் i10 நியோஸ் புது வேரியண்டை அறிமுகம் செய்தது.
  • புதிய கிராண்ட் i10 நியோஸ் மாடல் மேனுவல் மற்றும் AMT என இருவித டிரான்ஸ்மிஷன்களில் கிடைக்கிறது.

ஹூண்டாய் நிறுவனம் கிராண்ட் i10 நியோஸ் ஸ்போர்ட்ஸ் எக்சிக்யூடிவ் வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய கிராண்ட் i10 நியோஸ் விலை ரூ. 7 லட்சத்து 16 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் ஸ்போர்ட்ஸ் எக்சிக்யுடிவ் வேரியண்ட் மேனுவல் மற்றும் AMT என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது.

இவற்றின் விலை முறையே ரூ. 7 லட்சத்து 16 ஆயிரம் என்றும் ரூ. 7 லட்சத்து 70 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. புதிய வேரியண்ட் மேக்னா வேரியண்டின் மேல், ஸ்போர்ட்ஸ் வேரியண்டின் கீழ் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் ஸ்போர்ட்ஸ் எக்சிக்யுடிவ் வேரியண்டில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 82 ஹெச்பி பவர், 114 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

2023 ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் ஸ்போர்ட்ஸ் எக்சிக்யுடிவ் வேரியண்டில் எல்இடி டிஆர்எல்கள், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில் லைட்கள், 15 இன்ச் டூயல் டோன் ஸ்டைல் கொண்ட வீல்கள், குரூயிஸ் கண்ட்ரோல், 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, ரியர் ஏசி வெண்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. 

Tags:    

Similar News