கார்

வேற லெவல் அம்சங்களுடன் ஜூலை 10-இல் இந்தியா வரும் ஹூண்டாய் எக்ஸ்டர்!

Update: 2023-05-25 07:13 GMT
  • ஹூண்டாய் எக்ஸ்டர் மாடலில் வழங்க வேண்டிய அம்சங்களை கச்சிதமாக வழங்கி இருக்கிறது.
  • இந்திய சந்தையின் அதிவேகமாக வளர்ந்து வரும் மைக்ரோ எஸ்யுவி பிரிவில் ஹூண்டாய் களமிறங்குகிறது.

ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்டர் மைக்ரோ எஸ்யுவி மாடல் ஜூலை 10 ஆம் தேதி இந்திய சந்தையில் விற்பனைக்கு வர இருக்கிறது. ஹூண்டாய் இந்தியா நிறுவனம் எக்ஸ்டர் மாடல் பற்றிய அதிக விவரங்களை ஏற்கனவே வழங்கிவிட்டது.

அந்த வகையில், இந்த பிரிவில் எலெக்ட்ரிக் சன்ரூப், டேஷ்கேம் மற்றும் டூயல் கேமரா உள்ளிட்ட வசதிகளை கொண்ட முதல் கார் என்ற பெருமையை எக்ஸ்டர் பெற்று இருக்கிறது. புதிய ஹூண்டாய் எக்ஸ்டர் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. எக்ஸ்டர் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும்.

"வெளிப்புறத்தை பற்றி சிந்திக்கும் போது, கேன்வாஸ் அனிலிமிடெட் தான், ஹூண்டாய் எக்ஸ்டர் மாடலில் வழங்க வேண்டிய அம்சங்களை கச்சிதமாக வழங்கி இருக்கிறோம். இதுவரை வெளியான புகைப்படங்களுக்கு அமோக வரேவற்பு கிடைத்ததை அடுத்து, ஹூண்டாய் எக்ஸ்டர் மாடல் ஜூலை மாதம் 10 ஆம் தேதி இந்தியாவில் வெளியாகும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்," என்று ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி தருன் கார்க் தெரிவித்தார்.

புதிய எக்ஸ்டர் மாடல் மூலம் இந்திய சந்தையின் அதிவேகமாக வளர்ந்து வரும் மைக்ரோ எஸ்யுவி பிரிவில் ஹூண்டாய் களமிறங்குகிறது. இந்திய சந்தையில் ஹூண்டாய் எக்ஸ்டர் மாடல் டாடா பன்ச் மற்றும் சிட்ரோயன் C3 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. எக்ஸ்டர் மாடலின் வெளிப்புறம் பாக்சி டிசைன், ஸ்லோபிங் பொனெட் வழங்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News