கார்

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முற்றிலும் புதிய X3 M40i இந்தியாவில் அறிமுகம்

Update: 2023-05-12 13:20 GMT
  • புதிய X3 M40i மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வந்தது.
  • இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.9 நொடிகளில் எட்டிவிடும்.

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய X3 M40i கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய X3 மாடலின் விலை ரூ. 86 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது. சிபியு முறையில் இந்தியாவுக்கு கொண்டுவரப்படும் பிஎம்டபிள்யூ X3 M40i மாடல் குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனை செய்யப்படும் என்று தெரிகிறது.

புதிய X3 M40i மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வந்தது. முன்பதிவு பிஎம்டபிள்யூ ஆன்லைன் தளத்தில் மட்டுமே நடைபெறுகிறது. புதிய X3 M40i மாடல்: ப்ரூக்லின் கிரே மற்றும் பிளாக் சஃபையர் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் உள்புறம் சென்சடெக் பெர்ஃபோரேட் செய்யப்பட்ட இருக்கை மேற்கவர்கள் உள்ளன.

 

இந்த காரில் 3.0 லிட்டர், 6 சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 360 ஹெச்பி பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

காரின் வெளிப்புறம் ஹை-கிலாஸ் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்ட இரண்டடுக்கு கிட்னி கிரில் மற்றும் M லோகோ உள்ளது. இத்துடன் மேட்ரிக்ஸ் ரக எல்இடி ஹெட்லேம்ப்கள், ஹை கிலாஸ் ORVM-கள், பிளாக் க்ரோம் டெயில்பைப்கள், 20-இன்ச் M லைட் அலாய் வீல்கள், M ஸ்போர்ட் பிரேக் மற்றும் ரெட் கேலிப்பர்கள் வழங்கப்பட்டு உள்ளன.

Tags:    

Similar News