கார்

விற்பனையகம் வரத்துவங்கிய 2023 ஹூண்டாய் வெர்னா!

Update: 2023-03-18 09:58 GMT
  • ஹூண்டாய் நிறுவனத்தின் முற்றிலும் புதிய வெர்னா மாடல் சில தினங்களில் அறிமுகம் செய்யப்படுகிறது.
  • 2023 ஹூண்டாய் வெர்னா மாடலுக்கான டீசர்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் புதிய தலைமுறை வெர்னா மாடலை மார்ச் 21 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. கடந்த சில வாரங்களாக முற்றிலும் புதிய மிட்-சைஸ் செடான் மாடலுக்கான டீசர்களை ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில், புதிய வெர்னா மாடல் விற்பனையகம் வரத்துவங்கி இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

2023 ஹூண்டாய் வெர்னா மாடல் முற்றிலும் புதிய டிசைன் கொண்டிருக்கிறது. வெளிப்புறம் புதிய தலைமுறை வெர்னா மாடல் ஸ்போர்ட் டிசைன் கொண்டுள்ளது. இந்த மாடல் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் எலான்ட்ரா காரை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. காரின் முன்புறம் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்ட கிரில், கூர்மையான எல்இடி ஹெட்லேம்ப்கள், ஸ்போர்ட் பம்ப்பர் உள்ளது.

 

இத்துடன் ரிடிசைன் செய்யப்பட்ட பொனெட், எல்இடி லைட்டிங் சிஸ்டம், பக்கவாட்டில் கேரக்டர் லைன், முற்றிலும் புதிய அலாய் வீல்கள், ஃபாஸ்ட்-பேக் ஸ்டைல் ரூஃப்லைன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் கனெக்டெட் எல்இடி டெயில் லேம்ப்கள், பெரிய ஸ்பாயிலர், ரிவைஸ்டு ரியர் பம்ப்பர் உள்ளது. 2023 ஹூண்டாய் வெர்னா மாடல் EX, S, SX மற்றும் SX(O) என நான்கு வேரியண்ட்களில் கிடைக்க இருக்கிறது.

தற்போது வெளியாகி இருக்கும் புகைப்படங்களின் படி புதிய தலைமுறை வெர்னா மாடலின் உள்புறம் அளவில் பெரிய டச்ஸ்கிரீன் வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், வளைந்த டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் வழங்கப்படுகிறது.

புதிய ஹூண்டாய் வெர்னா மாடலில் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 160 பிஎஸ் பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு MT மற்றும் 7 ஸ்பீடு DCT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News