கார்
ரேன்ஜ் ரோவர்

19 கார்களை ரிகால் செய்யும் ஜாகுவார் லேண்ட் ரோவர்

Published On 2022-05-24 09:12 GMT   |   Update On 2022-06-06 09:52 GMT
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் 19 லேண்ட் ரோவர் கார்களை ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. ரிகால் செய்யப்படும் கார்கள் இலவசமாக சரிசெய்து தரப்பட இருக்கின்றன.


ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் 2022 ரேன்ஜ் ரோவர் மாடல்களின் கிராஷ் சென்சார் சரியாக பொருத்தப்படவில்லை என்பதை கண்டறிந்து உள்ளது. இதனை சரி செய்யவில்லை எனில் மோசமான பின் விளைவுகள் ஏற்படலாம் என ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் கருதுகிறது. 

இதனால் அமெரிக்க சந்தையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2 முதல் பிப்ரவரி 22 ஆம் தேதிக்குள் விற்பனை செய்யப்பட்ட ரேன்ஜ் ரோவர் எஸ்.யு.வி. மாடல்களை ரிகால் செய்ய ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதே காலக்கட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட யூனிட்களில் 100 சதவீதம் கோளாறு உள்ளன. 



இந்த கோளாறு காரணமாக காரின் முன்புற கிராஷ் சென்சார் செயலிழக்கலாம். இதனால் காரின் ஆக்டிவ் ரெசிஸ்டண்ட் சிஸ்டம்களும் சரியாக இயங்காமல் போகும். முன்புற கிராஷ் சென்சார்கள் இயங்காமல் போனால், காரணம் ஏர்பேக் சரியாக செயல்படாது. இது ஓட்டுனர் மட்டும் இன்றி காரில் பயணம் செய்யும் பயணிகளுக்கும் கடும் காயங்களை ஏற்படுத்தி விடும்.

இந்த கோளாறை ஏப்ரல் மாத வாக்கில் கண்டறிந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் ஆலையில் இதுபற்றிய விசாரணையை நடத்தியது. அதன் பின் தற்போது கோளாறு பாதுகாப்பு விஷயத்தில் ஆபத்தை ஏற்படுத்தி விடும் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. இதைத் தொடர்ந்து கார்களை ரிகால் செய்யும் நடவடிக்கையை ஜாகுவார் லேண்ட் ரோவர் மேற்கொண்டு வருகிறது. 
Tags:    

Similar News