ஆட்டோமொபைல்

இந்தியாவில் சோதனை செய்யப்படும் புத்தம் புதிய வேகன் ஆர்

Published On 2018-12-29 11:39 GMT   |   Update On 2018-12-29 11:39 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய வேகன் ஆர் ஹேட்ச்பேக் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. #MarutiSuzuki #WagonR



மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் புத்தம் புதிய வேகன் ஆர் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தியாவில் புதிய வேகன் ஆர் காரின் விற்பனை ஜனவரி 23 ஆம் தேதி துவங்கலாம் என தெரிகிறது. இந்நிலையில் புதிய கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஸ்பை படங்களின் படி புதிய கார் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. எனினும் வேகன் ஆர் காரின் பாரம்பரிய டால்பாய் ஃபிரேம் மாற்றப்படாமல் உள்ளது. புதிய காரில் ராப்-அரவுண்டு ஹெட்லேம்ப்கள், லைசிங் விண்டோ-லைன், ஃபுளோட்டிங் ரூஃப், பெரிய வீல் ஆர்ச்கள் மற்றும் செங்குத்தான டெயில் லைட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

புதிய வேகன் ஆர் உள்புறத்தின் மத்தியில் சென்டர் கன்சோலில் மவுன்ட் செய்யப்பட்ட கியர் ஸ்டிக் கொண்டிருக்கிறது. தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டாப் என்ட் வேரியன்ட்-இல் வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ மற்றும் புதிய தலைமுறை எர்டிகா மாடல்களில் வழங்கப்பட்ட ஹார்டெக்ட் பிளாட்ஃபார்ம் வழங்கப்பட்டுள்ளது.


புகைப்படம் நன்றி: GaadiWaadi

புதிய சோலியா மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டார் மற்றும் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் 91 பி.எஸ். மற்றும் 118 என்.எம். டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை AMT மற்றும் CVT கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

இந்தியாவில் புதிய மாருதி சுசுகி வேகன் ஆர் விலை ரூ.4-5 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கார் தவிர மாருதி சுசுகி நிறுவனம் வேகன் ஆர் காரின் எலெக்ட்ரிக் கார் 2020 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. #WagonR
Tags:    

Similar News