search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maruti WagonR"

    மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய வேகன்ஆர் காரின் முன்பதிவு இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது. முன்பதிவு கட்டணம் மற்றும் இதர விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Maruti #WagonR

    மாருதி சுசுகி நிறுவனம் புதிய வேகன்ஆர் ஹேட்ச்பேக் மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கியது. 2019 வேகன்ஆர் கார் முன்பதிவு செய்ய ரூ.11,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய வேகன்ஆர் மாடல் 2019, ஜனவரி 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் வேகன்ஆர் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி இருந்தன. அதன்படி காரின் முன்பக்கம் ஜப்பான் நாட்டு வழக்கப்படி காட்சியளிக்கிறது. சிறிய பொனெட், தடித்த க்ரோம் ஸ்லாட் க்ரில் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் ஸ்லைடர் கதவுகள் வழங்கப்பட்டுள்ளது. 

    வேகன்ஆர் மாடலில் ஐந்து பேர் பயணம் செய்ய முடியும். உள்புறமும், வெளிப்புறத்தை போன்றே மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி உள்புறத்தின் மத்தியில் சென்டர் கன்சோலில் மவுன்ட் செய்யப்பட்ட கியர் ஸ்டிக் கொண்டிருக்கிறது. தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டாப் என்ட் வேரியன்ட்-இல் வழங்கப்படும் என தெரிகிறது. 

    புதிய சோலியா மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டார் மற்றும் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் 91 பி.எஸ். மற்றும் 118 என்.எம். டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை AMT மற்றும் CVT கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    இந்தியாவில் புதிய மாருதி சுசுகி வேகன் ஆர் விலை ரூ.4-5 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கார் தவிர மாருதி சுசுகி நிறுவனம் வேகன் ஆர் காரின் எலெக்ட்ரிக் கார் 2020 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. #WagonR
    மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய வேகன் ஆர் ஹேட்ச்பேக் மாடலின் இன்டீரியர் விவரங்கள் புதிய ஸ்பை படங்களில் தெரியவந்துள்ளது. #MarutiSuzuki #WagonR

    மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் புத்தம் புதிய வேகன் ஆர் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தியாவில் புதிய வேகன் ஆர் காரின் விற்பனை ஜனவரி 23 ஆம் தேதி துவங்கலாம் என தெரிகிறது. இந்நிலையில் புதிய காரின் இன்டீரியர் விவரங்கள் புதிய ஸ்பை படங்களில் வெளியாகியுள்ளது.

    காரின் உள்புறம் டூயல்-டோன் டேஷ்போர்டு, இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மேம்படுத்தப்பட்டு, பெரிய ஸ்பீடோமீட்டர் மற்றும் வட்ட வடிவம் கொண்ட டையல் வழங்கப்பட்டுள்ளது. எனினும், காரின் முக்கிய இன்டீரியராக தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இருக்கிறது.

    புதிய வேகன் ஆர் உள்புறத்தின் மத்தியில் சென்டர் கன்சோலில் மவுன்ட் செய்யப்பட்ட கியர் ஸ்டிக் காணப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ மற்றும் புதிய தலைமுறை எர்டிகா மாடல்களில் வழங்கப்பட்ட ஹார்டெக்ட் பிளாட்ஃபார்ம் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படம் நன்றி

    ஸ்பை படங்களின் படி புதிய கார் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. எனினும் வேகன் ஆர் காரின் பாரம்பரிய டால்பாய் ஃபிரேம் மாற்றப்படாமல் உள்ளது. புதிய காரில் ராப்-அரவுண்டு ஹெட்லேம்ப்கள், லைசிங் விண்டோ-லைன், ஃபுளோட்டிங் ரூஃப், பெரிய வீல் ஆர்ச்கள் மற்றும் செங்குத்தான டெயில் லைட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

    புதிய வேகன் ஆர் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டார் மற்றும் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் 91 பி.எஸ். மற்றும் 118 என்.எம். டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை AMT மற்றும் CVT கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    இந்தியாவில் புதிய மாருதி சுசுகி வேகன் ஆர் விலை ரூ.4-5 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கார் தவிர மாருதி சுசுகி நிறுவனம் வேகன் ஆர் காரின் எலெக்ட்ரிக் கார் 2020 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. #WagonR
    மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய வேகன் ஆர் ஹேட்ச்பேக் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. #MarutiSuzuki #WagonR

    மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் புத்தம் புதிய வேகன் ஆர் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தியாவில் புதிய வேகன் ஆர் காரின் விற்பனை ஜனவரி 23 ஆம் தேதி துவங்கலாம் என தெரிகிறது. இந்நிலையில் புதிய கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

    ஸ்பை படங்களின் படி புதிய கார் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. எனினும் வேகன் ஆர் காரின் பாரம்பரிய டால்பாய் ஃபிரேம் மாற்றப்படாமல் உள்ளது. புதிய காரில் ராப்-அரவுண்டு ஹெட்லேம்ப்கள், லைசிங் விண்டோ-லைன், ஃபுளோட்டிங் ரூஃப், பெரிய வீல் ஆர்ச்கள் மற்றும் செங்குத்தான டெயில் லைட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

    புதிய வேகன் ஆர் உள்புறத்தின் மத்தியில் சென்டர் கன்சோலில் மவுன்ட் செய்யப்பட்ட கியர் ஸ்டிக் கொண்டிருக்கிறது. தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டாப் என்ட் வேரியன்ட்-இல் வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ மற்றும் புதிய தலைமுறை எர்டிகா மாடல்களில் வழங்கப்பட்ட ஹார்டெக்ட் பிளாட்ஃபார்ம் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படம் நன்றி: GaadiWaadi

    புதிய சோலியா மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டார் மற்றும் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் 91 பி.எஸ். மற்றும் 118 என்.எம். டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை AMT மற்றும் CVT கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    இந்தியாவில் புதிய மாருதி சுசுகி வேகன் ஆர் விலை ரூ.4-5 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கார் தவிர மாருதி சுசுகி நிறுவனம் வேகன் ஆர் காரின் எலெக்ட்ரிக் கார் 2020 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. #WagonR
    மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் புதிய வேகன்ஆர் லிமிட்டெட் எடிஷன் காரை வெளியிட்டுள்ளது. #maruti

    இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகி வேகன்ஆர் லிமிட்டெட் எடிஷன் கார் மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

    வேகன்ஆர் லிமிட்டெட் எடிஷன் காரில் வெளிப்புற ஸ்டைலிங் கிட், டபுள்-டின் ப்ளூடூத் மியூசிக் சிஸ்டம் மற்றும் ஸ்பீக்கர்கள் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் போன்ற புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய அம்சங்கள் தவிர, புதிய லிமிட்டெட் எடிஷன் வேகன்ஆர் மாடலில் அழகிய சீட் கவர்கள் மற்றும் ஆரஞ்சு அக்சென்ட்கள், சென்ட்டர் கன்சோல் மற்றும் டிரிம்களில் ஃபாக்ஸ்வுட் ஃபினிஷ், பிரீமியம் குஷன் சீட், பாடி கிராஃபிக்ஸ் மற்றும் பின்புறம் ஸ்பாயிலர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 

    பல்வேறு புதிய அம்சங்களால் வேகன்ஆர் லிமிட்டெட் எடிஷனின் இன்டீரியர் பிரீமியம் தோற்றம் கொண்டுள்ளது. புதிய வேகன்ஆர் லிமிட்டெட் எடிஷன் மாடலில் 998 சிசி 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 67 பி.ஹெச்.பி. பவர், 90 என்.எம். டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. 

    என்ட்ரி-லெவல் கார்களை வாங்குவோர் மத்தியில் பிரபலமான காராக மாருதி வேகன்ஆர் இருக்கிறது. மேலும் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாப்-5 கார்களில் ஒன்றாக மாருதி வேகன்ஆர் இருக்கிறது. 

    வேகன்ஆர் லிமிட்டெட் எடிஷன் இரண்டு வித உபகரணங்கள் அடங்கிய கிட் உடன் கிடைக்கிறது. இதன் விலை முறையே ரூ.15,490 மற்றும் ரூ.25,490 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ×