பைக்

மீண்டும் R15 V4 விலையை உயர்த்திய யமஹா

Published On 2022-08-05 08:28 GMT   |   Update On 2022-08-05 08:28 GMT
  • யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் தனது R15 V4 மோட்டார்சைக்கிள் விலையை மீண்டும் உயர்த்தி இருக்கிறது.
  • சமீபத்தில் யமஹா தனது இருசக்கர வாகனங்களின் மோட்டோ GP எடிஷனை அறிமுகம் செய்து இருந்தது.

யமஹா மோட்டார் நிறுவனம் சமீபத்தில் தான் R15 V4 மாடலின் மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோ GP எடிஷன் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புது வேரியண்ட் அறிமுகம் செய்த கையோடு யமஹா நிறுவனம் தனது R15 V4 மற்ற வேரியண்ட்களின் விலையை உயர்த்தி இருக்கிறது.

விலை உயர்வின் படி R15S விலையில் ரூ. 1000 உயர்த்தப்பட்டுள்ளது. R15 V4 மற்ற வேரியண்ட்களின் விலை ரூ. 1,500 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. யமஹா R15 V4 சீரிஸ் புது விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


யமஹா R15 V4

மெட்டாலிக் ரெட் ரூ. 1 லட்சத்து 78 ஆயிரத்து 900

டார்க் நைட் ரூ. 1 லட்சத்து 79 ஆயிரத்து 900

ரேசிங் புளூ ரூ. 1 லட்சத்து 83 ஆயிரத்து 900

யமஹா R15 V4 M

மெட்டாலிக் கிரே ரூ. 1 லட்சத்து 88 ஆயிரத்து 900

மோட்டோ GP எடிஷன் ரூ. 1 லட்சத்து 90 ஆயிரத்து 900

வொர்ல்டு GP 60th ஆனிவர்சரி எடிஷன் ரூ. 1 லட்சத்து 90 ஆயிரத்து 300

யமஹா R15S

ரேசிங் புளூ மற்றும் மேட் பிளாக் ரூ. 1 லட்சத்து 61 ஆயிரத்து 900

அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

விலை தவிர யமஹா R15 V4 மாடல்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த மாடலில் தொடர்ந்து 155சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் மற்றும் வேரியபில் வால்வு ஆக்டுவேஷன் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 18.1 ஹெச்.பி. பவர், 14.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு உள்ளது.

அம்சங்களை பொருத்தவரை டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், குயிக் ஷிப்டர், அப்சைடு-டவுன் போர்க்குகள், அலுமினியம் ஸ்விங் ஆர்ம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் யமஹா R15 சீரிஸ் கேடிஎம் RC 125 மாடலுக்கு போட்டியாக அமைகிறது. இந்த மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 89 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News