பைக்
யமஹா

தமிழகத்தில் இரு பிரீமியம் விற்பனை மையங்களை திறந்த யமஹா

Update: 2022-08-08 07:00 GMT
  • யமஹா நிறுவனத்தின் பிரீமியம் விற்பனை பிரிவாக புளூ ஸ்கொயர் செயல்பட்டு வருகிறது.
  • தமிழ் நாட்டில் இரண்டு புதிய புளூ ஸ்கொயர் விற்பனை மையங்கள் திறக்கப்பட்டன.

யமஹா நிறுவனம் 'தி கால் ஆப் தி புளு' பிரச்சாரத்தின் கீழ் புதிதாக இரண்டு புளூ ஸ்கொயர் விற்பனை மையங்களை தமிழ் நாட்டில் திறந்துள்ளது. இவை முறையே வேலூர் மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில் அமைந்துள்ளன. யமஹாவின் ரேசிங் டிஎன்ஏ, பந்தய தன்மையை வெளிப்படுத்தும் வகையில் சுமார் ஆயிரம் சதுர அடி பரப்பளவில் புதிய புளூ ஸ்கொயர் விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

புளூ ஸ்கொயர் விற்பனை மையங்கள் சமூக உணர்வை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் பிராண்டின் நெறிமுறைகளுடன் இணைவதற்கான தளத்தை உருவாக்கி இருக்கிறது. சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் -இல் யமஹாவின் பாரம்பரியத்தை வரையறுக்கும் பணியை புளூ ஸ்கொயர் மேற்கொள்கிறது. புளூ ஸ்கொயர் விற்பனை மையங்கள் யமஹாவின் பந்தய பாரம்பரியத்தை முன்னோக்கி எடுத்து செல்கிறது.


'தி கால் ஆப் தி புளு' பிரச்சாரத்தின் அங்கமாக தமிழ் நாட்டில் இரண்டு புதிய புளூ ஸ்கொயர் விற்பனை மையங்கள் திறப்பதில் யமஹா உற்சாகம் அடைகிறது. இந்தியா எங்களுக்கு மிக முக்கியமான சந்தை. இந்த பிரீமியம் விற்பனை மையங்கள் சர்வதேச மோட்டார் விளையாட்டுகளில் யமஹாவின் செழுமையான பாரம்பரியத்தை பிரதிநிதித்துப்படுத்துகிறது, என யமஹா மோட்டார் இந்தியா நிறுவன தலைவர் ஈஷின் சிஹானா தெரிவித்தார்.

வலுவான சில்லறை வர்த்தக வலையமைப்பை உருவாக்க புளூ ஸ்கொயர் விற்பனை மையங்கள் வழி வகுக்கும். புளூ ஸ்கொயர் விற்பனை மையங்கள் வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பிராண்டுடன் தொடர்பு கொள்ளவும், வாகன விவரங்களை அறியவும், உதிரிபாகங்கள் மற்றும் ஆடைகளை பார்க்க உதவும், என அவர் கூறினார்.

Tags:    

Similar News