பைக்

2022 மோட்டோ GP எடிஷன் மாடல்கள் அறிமுகம் - யமஹா அசத்தல்!

Update: 2022-08-03 09:10 GMT
  • யமஹா நிறுவனம் தனது தி கால் ஆப் தி புளூ வியாபார யுக்தியின் கீழ் புது மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது.
  • இந்த வரிசையில் தற்போது 2022 மோட்டோ GP எடிஷன் மாடல்கள் அறிமுகமாகி உள்ளன.

இந்தியா யமஹா மோட்டார் நிறுவனத்தின் தி கால் ஆப் தி புளூ வியாபார யுக்தியின் கீழ் 2022 மான்ஸ்டர் எனர்ஜி யமஹா மோட்டோ GP எடிஷன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. சூப்பர்ஸ்போர்ட் YZF-R15M, MT-15 V2.0, மேக்சி ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டர் ஏரோக்ஸ் 155, RayZR 125 Fi ஹைப்ரிட் ஸ்கூட்டர் போன்ற மாடல்கள் தற்போது மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோ GP எடிஷனிலும் கிடைக்கின்றன.

புதிய மோட்டோ GP எடிஷன் மாடல்கள் நாடு முழுக்க யமஹா நிறுவனத்தின் பிரீமியம் புளூ ஸ்கொயர் விற்பனை மையங்களில் கிடைக்கிறது. யமஹா YZF-R15M மற்றும் MT-15 V2.0 மாடல்களின் டேன்க் ஷிரவுட், பியூவல் டேன்க், பக்கவாட்டு பேனல் உள்ளிட்டகளில் மோட்டோ GP பிராண்டிங் உள்ளது. ஏரோக்ஸ் 155 மற்றும் RayZR மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோ GP எடிஷன் மாடல்களின் ஒட்டுமொத்த பாடி முழுக்க மோட்டோ GP பிராண்டிங் உள்ளது.


விலை விவரங்கள்:

2022 யமஹா R15M மோட்டோ GP எடிஷன் ரூ. 1 லட்சத்து 90 ஆயிரத்து 900

2022 யமஹா MT 15 V 2.0 மோட்டோ GP எடிஷன் ரூ. 1 லட்சத்து 65 ஆயிரத்து 400

2022 யமஹா RayZR 125 Fi ஹைப்ரிட் மோட்டோ GP எடிஷன் ரூ. 87 ஆயிரத்து 330

2022 யமஹா ஏரோக்ஸ் 15 மோட்டோ GP எடிஷன் விலை மட்டும் பின்னர் அறிவிக்கப்படும்

அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

"யமஹா நிறுவனம் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ்-இல் வலுவான பந்தய டிஎன்ஏ-வுக்கு பெயர் பெற்றது ஆகும். மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோ GP எடிஷன் என்பது பெருமை மிக்க வம்சாவெளியை காண்பிக்கும் மாதிரி வரம்பை வழங்குவதற்கு எங்கள் அர்ப்பணிப்பின் பிரதிநிதித்துவம் ஆகும். இன்று மோட்டோ GP ரசிகர்களாக இருக்கும் எங்கள் வாடிக்கையாளர்களுக்காக நான்கு மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோ GP எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்,"என யமஹா மோட்டார் இந்தியா குழும நிறுவனங்கள் தலைவர் ஈஷின் சிஹானா தெரிவித்தார்.

Tags:    

Similar News