பைக்

டி.வி.எஸ். பைக் விலையில் திடீர் மாற்றம் - புது விலை எவ்வளவு தெரியுமா?

Update: 2022-06-13 07:15 GMT
  • டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.
  • அந்த வரிசையில் 125சிசி பிரீமியம் மாடல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது இருசக்கர வாகனங்கள் விலையை இந்தியாவில் உயர்த்தி வருகிறது. இந்த முறை 125சிசி பிரீமியம் மோட்டார்சைக்கிள் மாடலான ரைடர் விலையை டி.வி.எஸ். நிறுவனம் உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு டிஸ்க் பிரேக் கொண்ட மாடலுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் டிரம் பிரேக் மாடலின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

புதிய விலை விவரங்கள்:

டி.வி.எஸ். ரைடர் டிரம் பிரேக் மாடல் ரூ. 84 ஆயிரத்து 573 (எந்த மாற்றமும் இல்லை)

டி.வி.எஸ். ரைடர் டிஸ்க் பிரேக் மாடல் ரூ. 90 ஆயிரத்து 989 (முந்தைய விலை ரூ. 89 ஆயிரத்து 089)


டி.வி.எஸ். ரைடர் மோட்டார்சைக்கிள் அந்நிறுவனத்தின் மற்ற மாடல்களை விட முற்றிலும் வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இதன் முன்புறம் எல்.இ.டி. ஹெட்லேம்ப், வித்தியாச தோற்றம் கொண்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்., இண்டிகேட்டர்களுக்கு ஹாலோஜன் யூனிட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இந்த மோட்டார்சைக்கிளில் 124சிசி, சிங்கில் சிலிண்டர், ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 11.32 பி.எஸ். பவர், 11.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News