பைக்

விரைவில் வெளியாகும் ஹண்டர் 350 - அசத்தல் டீசர் வெளியிட்ட ராயல் என்பீல்டு!

Published On 2022-08-01 07:56 GMT   |   Update On 2022-08-01 07:56 GMT
  • ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் பல்வேறு புது மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
  • புது ராயல் என்பீல்டு பைக் மாடல்கள் இந்திய சந்தையில் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஹண்டர் 350 மோட்டார்சைக்கிள் மாடலை ஆகஸ்ட் 07 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ராயல் என்பீல்டு நிறுவனம் டீசர் ஒன்றை வெளியிட்டு உள்ளது. தற்போதைய டீசரின் படி ராயல் என்பீல்டு நிறுவனம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி சிறப்பு அறிமுக நிகழ்வை நடத்த இருப்பது தெரியவந்துள்ளது.

புதிய ஹண்டர் 350 மோட்டார்சைக்கிள் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் குறைந்த விலை மாடலாக இருக்கும். இது புல்லட் 350 மாடலின் கீழ் நிலைநிறுத்தப்பட இருக்கிறது. ஹண்டர் 350 மாடல் ஹோண்டா CB350 RS மற்றும் யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் போன்ற மாடல்களுக்கு பதில் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் எனும் விலை பிரிவில் களமிறங்கும் பட்சத்தில் ஹண்டர் 350 மாடல் சந்தையில் அமோக வரவேற்பை பெறும்.


ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மாடலின் ஸ்டைலிங் அசத்தலாக உள்ளது. இது இளம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மெல்லிய பியூவல் டேன்க், அப்-ஸ்வெப்ட் சிங்கில் சீட், மற்ற ராயல் என்பீல்டு மாடல்களில் உள்ள அம்சம் மற்றும் குறைந்த எடை உள்ளிட்டவை இந்த மாடலின் முக்கிய அம்சங்களாக இருக்கும். இந்த மாடல் புதிய ஜெ பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. இதே பிளாட்பார்மில் முதன் முதலில் மீடியோர் 350 அறிமுகம் செய்யப்பட்டது.

அந்த வகையில் புதிய ஹண்டர் 350 மாடலிலும் 350சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 20 ஹெச்.பி. பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் இரண்டு புறங்களிலும் டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏபிஎஸ், டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் கியாஸ் சார்ஜ் செய்யப்பட்ட ட்வின் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்படுகின்றன.

Tags:    

Similar News