பைக்

இந்தியாவில் RC சீரிஸ் விலையை திடீரென மாற்றிய கேடிஎம்

Published On 2022-07-27 04:12 GMT   |   Update On 2022-07-27 04:12 GMT
  • கேடிஎம் நிறுவனம் இந்திய சந்தையில் தனது RC 125 மற்றும் RC 200 மாடல்களின் விலையில் திடீர் மாற்றம் செய்து இருக்கிறது.
  • விலை தவிர இரு மாடல்களிலும் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

கேடிஎம் நிறுவனம் RC 125 மற்றும் RC 200 ஃபுல்லி ஃபேர்டு மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை இந்திய சந்தையில் உயர்த்தி இருக்கிறது. முன்னதாக மே மாத வாக்கில் இரு மாடல்கள் விலையும் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. தற்போதைய அறிவிப்பின் படி RC 125 மாடலின் விலை ரூ. 1,779, RC 200 மாடலின் விலை ரூ. 1,427 அதிகரிக்கப்பட்டு உள்ளது.

புதிய விலை விவரம்:

கேடிஎம் RC 125: ரூ. 2 லட்சத்து 14 ஆயிரத்து 688

கேடிஎம் RC 200: ரூ. 1 லட்சத்து 88 ஆயிரத்து 640

அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


உற்பத்தி செலவீனங்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதே விலை உயர்வுக்கு காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக பல்வேறு நிறுவனங்களும் தங்களின் வாகன விலையை உயர்த்தி வருகின்றன. தற்போதைய விலை உயர்வை அடுத்து RC 125 மற்றும் RC 200 மாடல்கள் அந்த பிரிவில் விலை உயர்ந்த மாடலாக மாறி உள்ளன.

எனினும், இரு மாடல்களிலும் அவற்றுக்கு போட்டியாக உள்ள மோட்டார்சைக்கிள்களை விட அதிக அம்சங்கள், நவீன வசதிகள் மற்றும் அதிரடி செயல்திறன் வழங்கப்பட்டுள்ளன. கேடிஎம் RC 125 மாடலில் 124.7சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 14.75 ஹெச்.பி. பவர், 12 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

கேடிஎம் RC 200 மாடலில் 199.5சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 25.4 ஹெச்.பி. பவர், 19.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இரு மாடல்களிலும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்லிப்பர் கிளட்ச், பிரீமியம் WP சஸ்பென்ஷன், பைபிரெ பிரேக்குகள், ஸ்டீல் டிரெலிஸ் ஃபிரேம், 13.7 லிட்டர் பியூவல் டேன்க், ஃபுல் எல்இடி லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், மோட்டோ ஜிபி ஸ்டைலிங் உள்ளன. 

Tags:    

Similar News