பைக்

இந்தியாவில் புதிய ஹீரோ பேஷன் எக்ஸ்டெக் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?

Update: 2022-06-25 08:26 GMT
  • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் புது மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது.
  • இந்த மாடல் இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் பேஷன் எக்ஸ்டெக் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்தது. இந்த மாடலின் விலை ரூ. 75 ஆயிரத்து 590 என துவங்குகிறது. புதிய ஹீரோ பேஷன் எக்ஸ்டெக் மோட்டார்சைக்கிள் டிரம் மற்றும் டிஸ்க் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

விலை விவரங்கள்:

ஹீரோ பேஷன் எக்ஸ்டெக் டிரம்: ரூ. 74 ஆயிரத்து 590

ஹீரோ பேஷன் எக்ஸ்டெக் டிஸ்க்: ரூ. 78 ஆயிரத்து 990

அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


புதிய பேஷன் எக்ஸ்டெக் மாடலில் மேம்பட்ட அம்சங்கள் உள்ளன. அதன்படி ப்ரோஜெக்டர் எல்.இ.டி. ஹெட்லேம்ப், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ப்ளூடூத் மாட்யுல் எஸ்.எம்.எஸ்., கால் அலெர்ட் வசதியை வழங்குவதோடு, ரியல் டைம் மைலேஜ் இண்டிகேட்டர், லோ-பியூவல் இண்டிகேட்டர், சைடு ஸ்டாண்டு என்ஜின் கட் ஆஃப், சர்வீஸ் ரிமைண்டர் போன்ற வசதிகள் உள்ளன.

இந்த மாடலிலும் 110சிசி, சிங்கில் சிலிண்டர், பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜினுடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 9 ஹெச்.பி. பவர், 9.79 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

பேஷன் மட்டுமின்றி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஸ்பிலெண்டர் பிளஸ், கிளாமர் 125, பிளெஷர் பிளஸ் 110 மற்றும் டெஸ்டினி 125 போன்ற மாடல்களின் எக்ஸ்டெக் வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. 

Tags:    

Similar News