ஆட்டோமொபைல்

இந்தியாவில் சுசுகி ஜிக்சர் எஸ்.எஃப். 250 அறிமுகம்

Published On 2019-05-21 11:35 GMT   |   Update On 2019-05-21 11:35 GMT
சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் புதிய ஜிக்சர் எஸ்.எஃப். 250 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

 

சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் புதிய ஜிக்சர் எஸ்.எஃப். 250 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஜிக்சர் எஸ்.எஃப். 250 மாடலின் விலை ரூ.1.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஜிக்சர் எஸ்.எஃப். 250 அந்நிறுவனத்தின் முதல் குவாட்டர்-லிட்டர் வாகனம் ஆகும். சுசுகி ஜிக்சர் எஸ்.எஃப். 250 மாடலில் முற்றிலும் புதிய வடிவமைப்பு பெரிய ஜி.எஸ்.எக்ஸ்.-ஆர். மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஐரோப்பிய வடிவமைப்பு மற்றும் பிரீமியம் தரம், அழகிய ஸ்டைலிங் உள்ளிட்டவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.



ஃபுல்லி ஃபேர்டு ஜிக்சர் எஸ்.எஃப். 250 மாடலில் பெரிய டேன்க் வழங்கப்பட்டுள்ளது. அசத்தலான டூயல் எக்சாஸ்ட் மஃப்ளர் இந்த மாடலின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாக இருக்கிறது. இத்துடன் தங்க நிற என்ஜின் கவர், ஹேன்டிள்பார் க்ளிப்கள், எல்.இ.டி. ஹெட்லேம்ப் மற்றும் எல்.இ.டி. டெயில் லைட் யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளன.

சுசுகி ஜிக்சல் 250 மாடலில் புதிதாக உருவாக்கப்பட்ட 249 சிசி ஆயில் கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 26.5 பி.ஹெச்.பி. பவர் @9000 ஆர்.பி.எம். மற்றும் 22.6 என்.எம். டார்க் @7500 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

சுசுகி ஜிக்சர் 250 மோட்டார்சைக்கிள் லிட்டருக்கு 38.5 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என சுசுகி தெரிவித்துள்ளது. இத்துடன் மோட்டார்சைக்கிளின் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News