ஆட்டோ டிப்ஸ்

டாடா பன்ச் கேமோ எடிஷன் இந்தியாவில் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?

Update: 2022-09-22 11:34 GMT
  • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய பன்ச் கேமோ எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
  • புதிய ஸ்பெஷல் எடிஷன் மூலம் டாடா பன்ச் முதலாம் ஆண்டு விழாவை டாடா மோட்டார்ஸ் கொண்டாடுகிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் பன்ச் கேமோ எடிஷன் காரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டாடா பன்ச் கேமோ எடிஷன் விலை ரூ. 6 லட்சத்து 85 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய பன்ச் கேமோ எடிஷன் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய கேமோ எடிஷன் மாடல் டாடா பன்ச் முதலாம் ஆண்டு விழாவை கொண்டாடும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

டாடா பன்ச் கேமோ எடிஷன் மாடலின் வெளிப்புறம் போலியேஜ் கிரீன் நிறம் மற்றும் டூயல் டோன் கலர் ஆப்ஷன்கள் (பியானோ பிளாக் மற்றும் ப்ரிஸ்டைன் வைட்) கிடைக்கிறது. இந்த காரில் சில்வர் நிற ஸ்கிட் பிளேட்கள், கேமோ பேட்ஜிங் சார்கோல் நிற அலாய் வீல்கள், ஃபாக் லைட்கள், எல்இடி டிஆர்எல்கள், எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

காரின் உள்புறம் மிலிட்டரி கிரீன் இன்சர்ட்கள், கமோபிளேக் செய்யப்பட்ட சீட் கவர்கள், 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, குரூயிஸ் கண்ட்ரோல், என்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் போன்ற அம்சங்கள் உள்ளன.

புதிய டாடா பன்ச் கேமோ எடிஷன் மாடலிலும் 1.2 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 84 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட் மற்றும் AMT யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News