ஆட்டோ டிப்ஸ்

உற்பத்தியில் புது மைல்கல் எட்டிய டாடா நெக்சான்

Published On 2022-09-22 11:03 GMT   |   Update On 2022-09-22 11:03 GMT
  • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் மாடல் உற்பத்தியில் புது மைல்கல் எட்டியுள்ளது.
  • புது மைல்கல் யூனிட் அந்நிறுவன ஆலையில் இருந்து வெளியிடப்பட்டு இருக்கிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் மாடல் உற்பத்தியில் நான்கு லட்சம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. டாடா நெக்சான் உற்பத்தி துவங்கிய ஐந்து ஆண்டுகளில் இந்த மைல்கல் எட்டப்பட்டு உள்ளது.

2017 செப்டம்பர் மாத வாக்கில் டாடா நெக்சான் உற்பத்தி துவங்கயது. உற்பத்தி துவங்கிய முதல் 15 மாதங்களிலேயே நெக்சான் மாடல் ஒரு லட்சம் யூனிட்களை கடந்தது. அதன் பின் மற்றொரு ஆண்டு மற்றும் 11 மாதங்களில் 2 லட்சம் யூனிட்கள் மைல்கல்லை நெக்சான் எட்டியது.

இதைத் தொடர்ந்து அடுத்த எட்டே மாதங்களில் மூன்று லட்சம் யூனிட்களை கடந்தது. மூன்று லட்சம் யூனிட்களை கடந்த ஏழு மாதங்களில் நெக்சான் மாடல் நான்கு லட்சம் யூனிட்களை கடந்து விட்டது. இந்திய சந்தையில் டாடா நெக்சான் மாடல் ஐந்து நட்சத்திர குறியீடுகளை பெற்று மிகவும் பாதுகாப்பான கார் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. சர்வதேச NCAP சோதனையில் இத்தகைய புள்ளிகளை பெற்ற முதல் இந்திய கார் என்ற பெருமையை டாடா நெக்சான் வைத்திருக்கிறது.

டாடா நெக்சான் எஸ்யுவி மாடலில் பெரிய டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஸ்மார் கீலெஸ் எண்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் / ஸ்டாப், குரூயிஸ் கண்ட்ரோல் என ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது.

Tags:    

Similar News