ஆட்டோ டிப்ஸ்

சோதனையில் சிக்கிய ராயல் என்பீல்டு மீடியோர் 650

Published On 2022-08-19 17:13 IST   |   Update On 2022-08-19 17:13:00 IST
  • ராயல் என்பீல்டு நிறுவனம் தனது மீடியோர் 650 மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
  • இந்த மாடல் இந்திய சந்தையில் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகிறது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மீடியோர் 650 மாடல் புது ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. புதிய ஸ்பை படங்களில் இந்த மாடல் பிரமாண்ட ஸ்டிரீட் தோற்றம் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. தோற்றத்தில் இந்த மாடல் ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் போன்றே காட்சியளிக்கிறது.

இத்தகைய தோற்றம் கொண்டுருக்கும் பட்சத்தில் இது அந்நிறுவனத்தின் பிளாக்‌ஷிப் மாடலாக இருக்க வேண்டும். மேலும் இந்த ஸ்பை படங்களின் படி மீடியோர் 650 மாடல் ப்ரோடக்‌ஷன் வடிவம் பெற்று விட்டதாகவே தெரிகிறது. இந்த மாடலின் சஸ்பென்ஷன் செட்டப்-ஐ மட்டும் டியூனிங் செய்தால் மீடியோர் 650 முழுமையாக தயாராகி விடும் நிலையில் காட்சியளிக்கிறது.


ராயல் என்பீல்டு சூப்பர் மீடியோர் 650 மாடல் ராயல் என்பீல்டு இண்டர்செப்டார் 650 பைக்கின் பவர் மற்றும் டார்க்-ஐ ஒருங்கிணைத்து மீடியோர் 350 வழங்கும் சவுகரிய ரைடிங் அனுபவத்தை வழங்குகிறது. இதன் மூலம் கச்சிதமான டூரிங் மோட்டார்சைக்கிளை உருவாக்க முடியும். இதுவரை வெளியானதில் விலை உயர்ந்த ராயல் என்பீல்டு பைக் என்ற பெருமையை புதிய மீடியோர் 650 பெற இருக்கிறது.

அதிக விலை காரணமாக இந்த மாடலில் முன்புறம் யுஎஸ்டி போர்க், சற்றே தடிமனான டயர்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். வழக்கமான ராயல் என்பீல்டு மாடல்களில் கன்வென்ஷனல் போர்க்குகள் தான் வழங்கப்பட்டு இருக்கும். மற்றப்படி இண்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 மாடல்களை போன்றே இந்த மாடலிலும் 650சிசி, பேரலல் ட்வின் என்ஜின் வழங்கப்படுகிறது.

Photo Courtesy: Rushlane 

Tags:    

Similar News