ஆட்டோ டிப்ஸ்

இணையத்தில் லீக் ஆன புதிய புல்லட் 350 ஸ்பை படங்கள்

Update: 2022-09-20 10:53 GMT
  • ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய புல்லட் 350 மோட்டார்சைக்கிள் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளது.
  • இந்த பைக் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய ஜெ சீரிஸ் என்ஜின் கொண்டிருக்கும் என தெரிகிறது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய புல்லட் 350 மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதில் புதிய புல்லட் 350 மாடலில் ஜெ சீரிஸ் என்ஜின் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இதே என்ஜின் மீடியோர் 350, கிளாசிக் 350 மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹண்டர் 350 மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய புல்லட் 350 மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் 350சிசி என்ஜின் 20 ஹெச்பி பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது. தோற்றத்தில் புல்லட் 350 மாடல் கிளாசிக் 350 போன்றே காட்சியளிக்கிறது. ஸ்பை படங்களில் உள்ள மாடலில் கிளாசிக் 350 பைக்கில் இருப்பதை போன்ற டெயில் லேம்ப், இண்டிகேட்டர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இந்திய சந்தையில் புதிய ராயல் என்பீல்டு புல்லட் 350 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 48 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 63 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு ஹண்டர் 350 விலை ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 68 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய ராயல் என்பீல்டு புல்லட் 350 மாடலின் விலை குறைவாகவே இருக்குமா அல்லது ஹண்டர் 350 மாடலை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்தியாவில் ராயல் என்பீல்டு புல்லட் 350 மாடல் ஹோண்டா ஹைனெஸ் 350, பெனலி மற்றும் ஜாவா மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

Photo Coutresy: GaadiWaadi

Tags:    

Similar News