ஆட்டோ டிப்ஸ்

விரைவில் இந்தியா வரும் ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்

Update: 2022-08-01 10:55 GMT
  • ஹூண்டாய் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது கவனத்தை அதிகப்படுத்தி இருக்கிறது.
  • இந்திய சந்தையிலும் ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் மாடல்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட இருக்கிறது.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் இந்திய சந்தையில் கோனா எலெக்ட்ரிக் கார் மாடலை ஏற்கனவே விற்பனை செய்து வருகிறது. எதிர்காலத்தில் இதே காரின் பேஸ்லிப்ட் மாடலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 5 சீட்டர் மாடலான ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக், பிரீமியம் பிரிவில் அறிமுகமாகி இருக்கிறது.

கோனா எலெக்ட்ரிக் மாடலை தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் தனது இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்ய ஆயத்தமாகி விட்டது. அதன்படி ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த வாரம் புதிய டக்சன் மாடலை தொடர்ந்து புதிய எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.


கியா EV6 போன்று இல்லாமல், ஐயோனிக் 5 மாடல் செமி நாக்டு-டவுன் முறையில் இங்கு கொண்டுவரப்படுகிறது. கியா EV6 போன்றே ஐயோனிக் 5 மாடலும் E-GMP பிளாட்பார்மில் உருவாக்கப்படுகிறது. சமீபத்தில் தான் இந்த கார் 2022 ஆண்டுக்கான சிறந்த கார் என்ற விருதை வென்று இருந்தது.

2028 வாக்கில் இந்தியாவில் ஆறு புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகன சந்தையை பொருத்தவரை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் EV மாடல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இது மட்டுமின்றி மஹிந்திரா நிறுவனமும் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.

Tags:    

Similar News