ஆட்டோ டிப்ஸ்

இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் 2022 ஆடி Q3 - முன்பதிவு துவக்கம்

Update: 2022-08-12 11:04 GMT
  • ஆடி நிறுவனத்தின் 2022 Q3 மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
  • இந்த கார் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.

ஜெர்மனி நாட்டு ஆடம்பர கார் உற்பத்தியாளரான ஆடி புதிய Q3 மாடலுக்கான முன்பதிவை துவங்கி உள்ளது. 2022 ஆடி Q3 மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 2 லட்சம் ஆகும். இந்த கார் பிரீமியம் பிளஸ் மற்றும் டெக்னாலஜி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த காரை வாங்கும் முதல் 500 வாடிக்கையாளர்களுக்கு (2+3 ஆண்டுகள்) நீட்டிக்கப்பட்ட வாரண்டி சலுகையை பெற முடியும்.


புதிய ஆடி Q3 மாடலில் 2.0 லிட்டர் TFSI என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 187 ஹெச்பி பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிமீ வேகத்தை 7.3 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் ஆல் வீல் டிரைவ் வசதியை கொண்டுள்ளது.

காரின் வெளிப்புறம் எல்இடி ஹெட்லைட்கள், பானரோமிக் சன்கிளாஸ், ஹை கிளாஸ் ஸ்டைலிங் பேக்கேஜ், கம்பர்ட் கீ மற்றும் ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் டெயில்கேட் வழங்கப்பட்டு இருக்கிறது. உள்புறம் ஆடி விர்ச்சுவல் காக்பிட் பிளஸ், MMI நேவிகேஷன் பிளஸ் மற்றும் MMI டச், ஆடி டிரைவ் செலக்ட், வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட ஆடி போன் பாக்ஸ், 30 நிறங்கள் அடங்கிய ஆம்பியண்ட் லைட்டிங் பேககேஜ் பிளஸ் வழங்கப்பட்டுள்ளன. 

Tags:    

Similar News