உயர்வான எண்ணம் கொண்ட கும்ப ராசியினரே
ராசியில் உள்ள ராகு பகவானுக்கு வக்ர நிவர்த்தி பெற்ற குருவின் ஒன்பதாம் பார்வை உள்ளது. குருபகவானின் அருட் கருணையால் அனைத்து செயல்களும் சாதகமாக முடியும். பிறருக்கு உதவி செய்வதில் ஆர்வம் கூடும். விரும்பியதை மன பலத்தால் அடைவீர்கள். தடைகள் அகன்று எதிர்பார்த்த அனைத்து சுப பலன்களையும் அடையமுடியும். நல்ல செய்திகள் தேடி வரப்போகிறது. முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்வீர்கள். திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற தடைபட்ட சுப நிகழ்வுகள் நடக்கும். வேலைக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறும். குடும்பத்தை விட்டு வெளிநாட்டில் வாழ்ந்தவர்கள் குடும்பத்துடன் இணையும் வாய்ப்பு உள்ளது.
பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். மனதளவில் உற்சாகமாகவும், உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும். மனத் தடுமாற்றம் பய உணர்வு அகலும். பிறருக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.புதிய சொத்துக்கள் வாகனங்கள் சேரும். வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீட்டிற்குச் செல்வார்கள். தாயின் மூலம் ஆதாயம் கிடைக்கும். விவசாயிகளின் மனக்கவலை அகலும். கடன் தொல்லைக் கட்டுக்குள் இருக்கும்.
உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தொழில் தொடர்பான இழுபறியான விசயங்கள் சித்திக்கும். அரசின் ஆதரவு மானியம் கிடைக்கும். உறவினர்கள் நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். அலைச்சல் அதிகரிக்கும். முக்கிய செயல்களில் நன்மை தீமை அறிந்து முடிவு எடுப்பது நல்லது. போதிய பண வரவு இருந்தாலும் எதிர்பாராத செலவும் இருக்கும். அனைத்து துறையினருக்கும் எதிர்பார்த்த பதவி உயர்வு, திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் நிலவிய தடை தாமதங்கள் விலகும். பங்குச் சந்தை ஆதாயம் பாலிசி முதிர்வு தொகை கிடைக்கும். பூர்வீகச் சொத்து விற்பனையில் லாபம் அதிகரிக்கும். முன்னோர் சொத்துக்களை பிரிப்பதில் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்.
குல தெய்வ, இஷ்ட, தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்ற ஏற்ற காலம் இது. பிள்ளைகள் உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்வார்கள். மாணவர்களுக்கு உயர் கல்வி கற்கும் ஆர்வம் உண்டாகும். மனம் மகிழும் படியான நிகழ்வுகள் நடக்கும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். கலைத்துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எதிர் பாலினத்தவரிடம் தேவையறிந்து பழகவும். காதல் விவகாரங்கள் வம்பு, வழக்கில் முடியும்.வேற்று மதத்தவரால் இன்னல்கள் ஏற்படும். சிலர் மதம் மாறவும் செய்யலாம் . காதல் கலப்பு திருமணம் நடைபெறும். வெளி நபர்களால் குடும்பத்தில் குழப்பம் வரலாம் என்பதால் மனதை கட்டுப்படுத்தி தெரியாதவர்களிடம் பழகுவதை தவிர்த்தல் நலம்.
குருமங்கள யோகம்
பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவினை 3,10ம் அதிபதியான செவ்வாய் பார்ப்பது குருமங்கள யோகமாகும்.மன சஞ்சல மிகுதியால் கட்டுப்பாடு இல்லாமல் அலைந்த மனம் கட்டுப்படும். எவை நல்லவை, எவை தீயவை என மனதால் பகுக்க முடியும். உங்களை ஏளனம் பேசியவர்கள் எல்லாம் புகழ்வார்கள். தன் நம்பிக்கையும் தைரியமும் மிகுதியாகும்.தோற்றப் பொலிவு ஏற்படும். அதிர்ஷ்டத்தின் மேல் நம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பாலின நட்பால் குடும்பத்தில் தேவையில்லாத மன சஞ்சலம் உருவாகலாம்.உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் கூடிய ஊதிய உயர்வு கிடைக்கும். அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும். புதிய தொழில் முயற்சி வெற்றி அடையும். வீட்டில் சுபமங்கள காரியங்களால் தாராளமான பணச் செலவுகள் ஏற்படும். புதிய வீடு கட்ட வங்கிக் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம்.கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். புதிதாக ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
பொருளாதாரம்
பொருளாதார ஏற்றத்தாழ்வு மிகுதியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவையை நிறைவு செய்ய அதிக சிரமங்களை சந்திக்க வேண்டும்.உண்ண உறங்க நேரம் இல்லாமல் அதிகம் உழைக்க நேரும்.கண் நோய் வரும். கண்களில் சிறு அறுவை சிகிச்சை செய்ய நேரும். கண்ணாடி அணிய நேரும். நிம்மதியான தூக்கம் இருக்காது. அந்நிய மொழிப் புலமை ஏற்படும். அந்திய மொழிய கற்றுக் கொடுப்பதால் வருமானம் வரும். பணப்புழக்கம்அதிகரிக்கும். நகைச் சீட்டு, ஏலச் சீட்டு என சேமிப்புகள் அதிகரிக்கும். நகை புடவை என ஆடம்பர அழகு பொருட்கள் வாங்கி ஆனந்தமாக வாழ்வீர்கள். திடீர் அதிர்ஷ்டம், பண வரவுகள் ஏற்படும். அதிர்ஷ்டம், பண வரவு உங்களைச் சார்ந்தவர்களுக்கே பயன்படும்.
உத்தியோகஸ்தர்கள்
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் , வேலைப் பளு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடு மிகும். உங்களை விட தகுதி குறைந்த நபருக்கு பதவி உயர்வு கொடுத்து கவுரவிப்பது உங்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தும். பதவி உயர்வு தடைபடும். உத்தியோகத்தில் யாரோ செய்த தவறுக்கு நீங்கள் மெமோ வாங்க நேரும். குறைந்த சம்பளத்திற்கு அதிக வேலை செய்ய நேரும்உயர் அதிகாரிகளுக்கு நம்பிக்கை குறைவு ஏற்படும். இதற்காக மனம் வருந்தி வேலையை விட்டால் புதிய வேலை கிடைக்கும் வாய்ப்பு மிக மிக குறைவு .வேலையில் விரும்பிய மாற்றம் கிடைக்கும்.அரசு உத்தியோக வாய்ப்பு சித்திக்கும். எதிரிகள் தாமே விலகுவார்கள்.
கவனம் தேவை
செவ்வாய் சனி சேர்க்கை 2ம்மிடமான தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தில் உள்ள ராசி அதிபதி சனியுடன் 3,10 அதிபதி செவ்வாய் பங்குனி 19 (2.4.2026) அன்று இணைகிறார்.வார்த்தையில் நிதானம் தேவை. தீயினால் சுட்ட புண் ஆறும். நாவினால் சுட்ட வடு ஆறாது. நீங்கள் விட்ட வார்த்தையே அம்பாக மாறி உங்களை பதம் பார்க்கும். அதே நேரத்தில் வெளுத்தது எல்லாம் பால் என எல்லோரையும் நம்பி திறந்த மனதாக உங்களின் மனக் குமுறலை கொட்டக் கூடாது. உங்கள் முன் நல்லவர் போல் ஆமாம் போட்டு உங்களுக்கு பின்னால் நீங்கள் பேசியதை திரித்து பேசி குற்றவாளி கூண்டில் ஏற்றிவிடுவார்கள். தம்பதிகளிடையே மனக்கசப்பு ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் குறை கூறி திட்டி சிறிய பிரச்சனையை கூட பெரிய பிரச்சனையாக்குவார்கள். பொருளாதார ஏற்ற தாழ்வு மிகுதியாக இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத சூழ்நிலை உங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும். குடும்ப உறுப்பினர்கள் உண்மையில் உங்களிடம் பாசம் காட்டினால் பாசங்கு செய்வது போன்ற மன உணர்வு தோன்றும். பெற்றோரே உலகம் என்று நம்பி வாழ்ந்த உங்களுக்கு பெற்றோரே உரிய நேரத்தில் பாசம் காட்டாமல் இருப்பார்கள்.
பரிகாரம்
சனிக்கிழமைகளில் சக்ரத்தாழ்வார் நரசிம்மர் வழிபாடு செய்ய மன நிம்மதி தேடி வரும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406