என் மலர்
கும்பம் - தமிழ் மாத ஜோதிடம்
கும்பம்
2025 ஆனி மாத ராசிபலன்
எதையும் துணிந்து செய்யும் கும்ப ராசி நேயர்களே!
ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி ஜென்ம சனியாக சஞ்சரிக்கிறார். வாக்கிய கணித ரீதியாக சனி உங்கள் ராசியில் இன்னும் இருக்கிறார். எனவே ஆரோக்கிய தொல்லைகள் அதிகரிக்கும். செவ்வாயின் பார்வை சனி மீது பதிகிறது. குருவின் பார்வையும் சனி மீது பதிகிறது. இருப்பினும் எதையும் நீங்கள் திட்டமிட்டு செய்ய இயலாது. திடீர் விரயங்கள் ஏற்படும். எதிரிகளின் பலம் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். வளர்ச்சியில் குறுக்கீடுகள் ஏற்படும். யோசித்து செயல்பட வேண்டிய மாதமிது.
கடக - புதன்
ஆனி 8-ந் தேதி கடக ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம அஷ்டமாதிபதியானவர் புதன். அஷ்டமாதிபதி 6-ம் இடத்திற்கு வருவது நன்மை தான். ''கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்'' என்பதற்கேற்ப எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். எதிர்காலம் சிறப்பாக அமைய எடுத்த முயற்சிகள் வெற்றிபெறும். சென்ற மாதத்தில் நடைபெறாத சில காரியங்கள் இப்பொழுது நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும். உத்தியோகத்தில் இதுவரை நீங்கள் கேட்டும் கிடைக்காத ஊர்மாற்றங்கள் இப்பொழுது கிடைக்கும். பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர வாய்ப்பு உண்டு. புனிதப் பயணங்கள் அதிகரிக்கும்.
ரிஷப - சுக்ரன்
ஆனி 15-ந் தேதி ரிஷப ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். சுக ஸ்தானாதிபதி சுக்ரன் சுக ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் நல்ல நேரம்தான். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். கடமையை செவ்வனே செய்து முடித்து வெற்றிகாண்பீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. தாய்வழி ஆதரவு கிடைக்கும். இதுவரை மற்ற சகோதரர்கள் மீது காட்டிய பாசத்தை இப்பொழுது உங்களிடம் காட்டுவர். வெளிநாட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களுடைய சுறுசுறுப்பான செயல்பாடு மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
செவ்வாய் - சனி பார்வை
மாதம் முழுவதும் சிம்மத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், கும்பத்தில் சஞ்சரிக்கும் சனியைப் பார்க்கிறார். அதே நேரத்தில் குருவின் பார்வையும் சனி மீது பதிவதால் உங்கள் ராசி புனிதமடைகிறது. எனவே பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது. பிரச்சினைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் வந்துசேரும். கூட்டு முயற்சியிலிருந்து விலகி தனித்து இயங்கலாமா? என்று சிந்திப்பீர்கள். கொடுக்கல் - வாங்கல்களில் நிறைய பாக்கிகள் தேங்கி இருக்கும். உடன்பிறப்புகளால் விரயம் உண்டு. நண்பர்கள் ஒருசில காரியங்களை செய்து தருவதாக சொல்லிவிட்டு கடைசி நேரத்தில் பின்வாங்குவர்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு குறுக்கீடுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளால் தொல்லை உண்டு. கலைஞர்களுக்கு நட்பால் நன்மை கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு நினைத்த இலக்கை அடைய முடியும். பெண்களுக்கு விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம் நன்மை தரும்.
இம்மாதம் சனீஸ்வரர் வழிபாடு சந்தோஷத்தை வழங்கும்.
கும்பம்
2025 சித்திரை மாத ராசிபலன்
எதையும் சமாளிக்கும் வல்லமை பெற்ற கும்ப ராசி நேயர்களே!
விசுவாவசு வருட புத்தாண்டின் சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி ராசி யிலேயே சஞ்சரிக்கிறார். ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடைபெற்று கொண்டிருக்கிறது. 2-ல் ராகுவும், அஷ்டமத்தில் கேதுவும் இருந்து மாதம் தொடங்குவதால் மனக்குழப்பம் அதிகரிக்கும்.
உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காது. எந்த செயலையும் நினைத்தவுடன் செய்ய இயலாது. அர்த்தாஷ்டம குருவின் ஆதிக்கமும் இருப்பதால், தொழிலில் சில இடையூறு வந்துசேரும். தொகை வருவதிலும் தாமதங்கள் ஏற்படும். எதிலும் கவனத்தோடு செயல்பட வேண்டிய மாதம் இது.
குரு - சுக்ர பரிவர்த்தனை
சித்திரை 1-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை, குரு - சுக்ர பரிவர்த்தனை இருக்கிறது. உங்கள் ராசிக்கு சுகாதி பதியானவர் சுக்ரன். தன - லாபாதிபதியானவர் குரு. இவர்களுடைய பரிவர்த்தனை யோகம் அற்புதமான யோகமாகும். பொருளாதார முன்னேற்றம், புது முயற்சியில் வெற்றி, தொழிலில் கூடுதல் லாபம் போன்றவை ஏற்படும் நேரம் இது. சம்பள உயர்வின் காரணமாக புதிய வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கிடைக்கும். இல்லத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
கும்ப - ராகு, சிம்ம - கேது
சித்திரை 13-ந் தேதி கும்ப ராசியில் ராகுவும், சிம்ம ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். ஜென்மத்தில் ராகுவும், 7-ல் கேதுவும் சஞ்சரிப்பதால் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. நண்பர்கள் பகையாக மாறுவர். சிறிய காரியத்திற்கு கூட அதிக அலைச்சலும், பிரயாசையும் எடுக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும்.
மனகிலேசமும், உடல் உபாதையும் தீர மருத்துவ ஆலோசனைகள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும். எதிர்பாராத இடமாற்றம் மனக்கவலையை அதிகரிக்க வைக்கும். விரயங்களில் இருந்து விடுபடவும், வீண் வாக்கு வாதங்களில் இருந்து அகலவும், தடுமாற்றம் ஏற்படாமல் இருக்கவும் ராகு - கேதுக்களுக்கு பரிகாரம் செய்வது நல்லது.
மேஷ - புதன் சஞ்சாரம்
சித்திரை 17-ந் தேதி, மேஷ ராசிக்கு புதன் செல்கிறார். அங்குள்ள சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். பஞ்சம - அஷ்டமாதிபதியான புதன், சூரியனோடு சேரும் பொழுது பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவம் நடைபெறும். அவர்களின் கல்யாண முயற்சிகள் கைகூடும். பூர்வீக சொத்துக்களை பிரித்துக்கொள்வதில் இருந்த தடை அகலும். உடன்பிறப்புகளின் வழியே நன்மை ஏற்படும். வழக்குகள் சாதகமாக முடியும். வாகன யோகம் உண்டு. பயணங்களால் பலன் கிடைக்கும். இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வந்துசேரும்.
மிதுன - குரு சஞ்சாரம்
சித்திரை 28-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு செல்கிறார். அதன் பார்வை பலத்தால் உங்கள் ராசி புனிதமடைகிறது. ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். இடம், பூமி சேர்க்கை, வீடு கட்டுவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். பெற்றோர் வழி உறவில் இருந்த விரிசல் அகலும். அவர்களின் ஆதரவோடு தொழில் வளத்தை பெருக்கிக் கொள்வீர்கள். திருமண முயற்சி கைகூடும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்மட்ட அதிகாரிகளால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். கலைஞர்களுக்கு முயற்சிகளில் வெற்றி கிட்டும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அதிக கவனம் தேவை. பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை பலப்படும். கொடுக்கல் - வாங்கல்கள் திருப்தி தரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஏப்ரல்: 14, 15, 19, 20, 25, 26, மே: 1, 2, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்
கும்பம்
2025 பங்குனி மாத ராசிபலன்
நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கும்ப ராசி நேயர்களே!
பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி, உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அஷ்டமத்தில் கேது சஞ்சரிப்பதால் மன வருத்தம் அதிகரிக்கும். நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்ய இயலாது. பயணங்களால் அலைச்சல் ஏற்படுமே தவிர, ஆதாயம் கிடைக்காது. எதை எந்த நேரம் செய்ய நினைத்தாலும், அதில் இடையூறுகளை சந்திக்க நேரிடும். இது போன்ற நேரங்களில் திசா புத்திக்கேற்ற தெய்வங்களை வழிபடுவது நல்லது.
மீன - புதன் சஞ்சாரம்
மாதத் தொடக்கத்தில் மீன ராசியில் புதன் நீச்சம் பெற்றும், வக்ரம் பெற்றும் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம - அஷ்டமாதிபதி வலுவிழப்பது அவ்வளவு நல்லதல்ல. பிள்ளைகளால் பிரச்சினைகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துத் தகராறுகள் மீண்டும் தலைதூக்கும். அஷ்டமாதிபதி வலுவிழப்பதால், தடைப்பட்ட சில காரியங்கள் தானாக நடைபெறும். 'கட்டிடம் கட்டும் பணி பாதியில் நிற்கின்றதே' என்ற கவலை இனி அகலும். மாமன், மைத்துனர் வழியில் உருவான மனக்கசப்பு மாறும். இழந்த சொத்துக்களை மீண்டும் பெறுவீர்கள்.
கும்ப - புதன் சஞ்சாரம்
பங்குனி 4-ந் தேதி புதன், கும்ப ராசிக்கு வக்ர இயக்கத்தில் வருகிறார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் உங்கள் ராசியில் வக்ரம் பெறும் பொழுது, நற்பலன்களை வழங்குவார். என்றாலும் பூர்வீக சொத்துக்களால் பிரச்சினைகள் அதிகரிக்கும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. எதிரிகளின் பலம் கூடும். எதையும் திட்டமிட்டு செய்ய முடியாமல் தவிப்பீர்கள். திடீர் திடீரென வரும் மாற்றங்கள், மனக்கலக்கத்தை உருவாக்கும். தொழில் போட்டிகள் அதிகரிக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்கள் வீண் பழிகளுக்கு ஆளாக நேரிடும்.
மீன - சுக்ரன் வக்ரம்
மீனத்தில் உள்ள சுக்ரன், இந்த மாதம் முழுவதும் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். அசுர குரு வக்ரம் பெறுவது ஒரு வழிக்கு நன்மைதான். என்றாலும் உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன் என்பதால், வாங்கிய இடத்தை விற்க வேண்டிய சூழல் உருவாகும். வாகனம் வாங்கும் முயற்சியில் தடை ஏற்பட்டு அகலும். குடும்பத்தில் நீண்ட நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சினை மீண்டும் தலைதூக்கும். பொருளாதார பற்றாக்குறையின் காரணமாக ஒரு சிலர் கைமாற்று வாங்குவார்கள். பயணங்கள் பலன் தரும் வகையில் அமையாது. நல்ல பலன்கள் தேடிவர சுக்ர பகவான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
கடக - செவ்வாய்
பங்குனி 24-ந் தேதி கடக ராசிக்குச் செல்லும் செவ்வாய் அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். மூட்டு வலி, முழங்கால் வலி என்று ஏதேனும் ஒரு குறைபாடு வந்துசேரும். உடன்பிறப்புகளால் சில பிரச்சினைகள் உருவாகும். ஊர் மாற்றம், ஒரு சிலருக்கு வீடு மாற்றம் உறுதியாகலாம். சொந்த கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, வாடகை கட்டிடத்திற்கு மாற்றும் சூழ்நிலை கூட உண்டு.
பொதுவாழ்வில் உள்ளவர்கள் உத்தியோகத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவர். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, இட மாற்றம் இனிமை தருவதாக அமையும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு பெற்றோரின் ஆதரவு பெருமை சேர்க்கும். பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை பலப்படும். கொடுக்கல் - வாங்கல்களில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
மார்ச்: 18, 19, 22, 23, 29, 30, ஏப்ரல்: 3, 4, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.
கும்பம்
2025 மாசி மாத ராசிபலன்
எதிர்கால திட்டங்களைப் பற்றி சிந்திக்கும் கும்ப ராசி நேயர்களே!
மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவரோடு பகைக் கிரகமான சூரியனும் உடன் இணைந்திருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இரண்டில் இருக்கும் ராகுவால் பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். என்றாலும் மனக்குழப்பம் அதிகரிக்கும்.
திடீர் திடீரெனக் குணங்களில் மாற்றம் ஏற்படும். கொடுக்கல் - வாங்கல்களில் தடுமாற்றம் வரலாம். எதிர்மறை சிந்தனைகள் உருவாகும். சனி மற்றும் சூரியனுக்குரிய வழிபாடுகளோடு, குலதெய்வம், இஷ்டதெய்வம் வழிபாடுகளையும் மேற்கொள்வது நல்லது.
சூரியன் - சனி சேர்க்கை
இந்த மாதம் முழுவதும் கும்ப ராசியில் சூரியன் - சனி சேர்க்கை ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு அதிபதியான சனி சப்தமாதிபதி சூரியனுடன் இணைந்திருப்பது அவ்வளவு நல்லதல்ல. வாழ்க்கைத் துணையோடு பிரச்சினை அதிகரிக்கும். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வருமானம் பலவழிகளிலும் செலவாகும். குடும்பச்சுமை கூடும்.
பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் திடீரென மாற்றப்படலாம். அனுபவஸ்தர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் அன்றாட வாழ்க்கையை நன்றாக அமைத்துக் கொள்ள இயலும். ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கலாம். ஜீரண உறுப்புகள் சம்பந்தப்பட்ட தொல்லைகள் ஏற்படலாம். கவனம் தேவை.
செவ்வாய் வக்ர நிவர்த்தி
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், மாசி 9-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு சகாய ஸ்தானாதிபதியான செவ்வாய், தொழில் ஸ்தானாதிபதியாகவும் விளங்குபவர். அவர் பலம்பெறும் இந்த நேரம் ஒரு பொன்னான நேரமாகும். புதிய திருப்பங்கள் பலவும் எற்படும். புனிதப் பயணங்கள் செல்லும் வாய்ப்பு உண்டு. வழக்குகள் சாதகமாக அமையும்.
வருமானப் பற்றாக்குறை அகலும். நினைத்த நேரத்தில் நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். நிகழ்காலத் தேவைகள் படிப்படியாகப் பூர்த்தியாகும். புதிய ஒப்பந்தங்கள் அடிக்கடி வந்து சேரும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்துக் கொடுப்பார்கள்.
மீன - புதன் சஞ்சாரம்
மாசி 14-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம - அஷ்டமாதிபதியானவர் புதன். அஷ்டமாதிபதி நீச்சம் பெறுவது நன்மைதான். என்றாலும் பஞ்சமாதிபதியாகவும் அல்லவா புதன் விளங்குகிறார். எனவே நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும் நேரம் இது. பிள்ளைகள் வழியில் பெருமைக்குரிய தகவல் கிடைக்கும்.
அவர்கள் தானாகவே சில முடிவுகளை எடுத்து, உங்களுக்கு மனக்கவலை தரும்விதம் நடந்துகொள்வர். பூர்வீக சொத்துக்களை விற்பதில் சில பிரச்சினைகள் வரலாம். எதையும் எளிதில் செய்ய இயலாது. பெரும் பிரயாசை எடுத்தே செய்ய முடியும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு நீண்ட தூரத்திற்கான மாறுதல் கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு நினைத்த இலக்கை அடைய முடியும். பெண்களுக்கு எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
பிப்ரவரி: 19, 20, 23, 24, மார்ச்: 2, 3, 6, 7.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.
திட்டமிட்டு செயலாற்றி வெற்றி காணும் கும்ப ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவரோடு சுக ஸ்தானாதிபதி சுக்ரனும் சஞ்சரிப்பதால், சுகங்களும், சந்தோஷங்களும் வந்துசேரும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள். திடீர் யோகங்களும் உண்டு. இரண்டில் இருக்கும் ராகுவால் திரண்ட செல்வங்களும் வரலாம். தெய்வத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் வழியில் பகை பாராட்டாமல் நடந்துகொள்வது நல்லது.
மிதுன - செவ்வாய்
தை 5-ந் தேதி மிதுன ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், வக்ரம் பெறும்போது உடன்பிறப்புகளின் ஆதரவு கொஞ்சம் குறையலாம். பாகப்பிரிவினை சம்பந்தமாக ஏற்பட்ட பஞ்சாயத்துக்கள் முடிவடையாமல் போகலாம். தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவு குறையும். வேலையாட்களாலும் சில பிரச்சினைகள் வரலாம். இருப்பினும் தைரியமும், தன்னம்பிக்கையும் மிக்கவர்கள் நீங்கள். தொழில் ஸ்தானத்தில் குருவின் பார்வை பதிவதால், புதிய யுக்திகளைக் கையாண்டு வளர்ச்சி காண்பீர்கள்.
மகர - புதன்
உங்கள் ராசிக்கு பஞ்சம - அஷ்டமாதிபதியான புதன், தை 6-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். அஷ்டமாதிபதியான புதன் விரய ஸ்தானத்திற்கு வருவது யோகம்தான். எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். அதே நேரம் பஞ்சமாதிபதியாகவும் புதன் விளங்குவதால், பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி வலிமை இழக்கிறார். எனவே மனக்கசப்பு தரும் சம்பவங்கள் நடைபெறலாம். உற்றார்- உறவினர்களால் உருவாகும் பிரச்சினைகள் உள்ளத்தை நெருடும். பத்திரப் பதிவுகளில் தாமதம் ஏற்படலாம். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். எதையும் திட்டமிட்டு செய்தால் வெற்றி உண்டு.
கும்ப - புதன்
தை 23-ந் தேதி உங்கள் ராசிக்கு புதன் வருகிறார். இது ஒரு உன்னதமான நேரமாகும். தொட்டது துலங்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். கடன் சுமை படிப்படியாகக் குறையும். கவலைக்குரிய தகவல்கள் உங்களை விட்டு விலகும். மாற்று மருத்துவம் உடல்நலத்தை சீராக்கும். கூட்டு முயற்சியில் இருந்து விடுபடுவீர்கள்.
குரு வக்ர நிவர்த்தி
ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான், தை 29-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். இக்காலம் ஒரு இனிய காலமாக அமையும். வெற்றிக்குரிய செய்திகள் வீடு தேடி வரும். தன -லாபாதிபதி பலம் பெறுவதால் பொருளாதாரப் பிரச்சினை அகலும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு மாற்றம், நாடு மாற்றம் விருப்பம் போல் அமையும். வெளிநாட்டில் இருந்து ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும். குடும்ப ஒற்றுமை பலப்படும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு தன்னலமற்ற சேவைக்காக பாராட்டு குவியும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் கேட்ட சலுகைகளை வழங்குவர். கலைஞர்களுக்கு கனவுகள் நனவாகும். மாணவ - மாணவிகள் பாராட்டுக்களைப் பெறுவர். பெண்களுக்கு மனநிறைவான வாழ்க்கை அமையும். வருமானம் திருப்தி தரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 14, 15, 21, 22, 27, 28, பிப்ரவரி: 2, 3, 7, 8.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.
கும்பம்
2024 மார்கழி மாத ராசிபலன்
மற்றவர் நம்பிக்கைக்கு பாத்திரமான கும்ப ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். ஆனால் அவரை பகைக் கிரகமான செவ்வாய் பார்க்கிறார். எனவே எதையும் யோசித்து செய்வது நல்லது. வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கலாம்.
வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படாமல் இருக்க வழிபாடுகள் கைகொடுக்கும். இருந்தாலும் மனதில் இனம் புரியாத கவலை மேலோங்குவதை தவிர்க்க முடியாது. நண்பர்களை நம்பி எந்தக் காரியமும் செய்ய இயலாது. உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நேரம் இது.
செவ்வாய் - சுக்ரன் பார்வை
மாதத் தொடக்கத்தில் கடகத்தில் உள்ள செவ்வாய், மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரனைப் பார்க்கிறார். சுக்ரன், கும்பத்திற்கு சென்ற பிறகும் செவ்வாயின் பார்வை அவர் மீது பதிகிறது. உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், செவ்வாய். எனவே இக்காலத்தில் தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்.
கடமையில் இருந்த தொய்வு அகலும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். ஊர் மாற்றம், இடமாற்றம் விரும்பத்தக்க விதம் அமையும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் யோகம் உண்டு.
குரு வக்ரம்
உங்கள் ராசிக்கு தன - லாபாதிபதியானவர் குரு பகவான். அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. எனவே கொடுக்கல் - வாங்கலில் பிரச்சினையும், ஏமாற்றமும் ஏற்படலாம். கொடுத்த தொகையை வாங்க முடியாமல் தவிப்பீர்கள். கொள்கை பிடிப்போடு செயல்பட இயலாது.
அதே சமயம் ஆரோக்கியத்திலும் பிரச்சினைகள் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவி செய்வதாக சொல்லி கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். தொடர்ந்து குரு வழிபாடும், வியாழக்கிழமை விரதமும் இருந்து வந்தால் ஓரளவு நன்மைகள் நடைபெறும்.
கும்ப - சுக்ரன்
மார்கழி 15-ந் தேதி, உங்கள் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், உங்கள் ராசிக்கே வருவது யோகம்தான். இல்லத்தில் சுகமும், சந்தோஷமும் அடியெடுத்து வைக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். தாய்வழி ஆதரவு திருப்தி தரும். தொழில் ரீதியாக எடுத்த புதிய முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும். வாடகை கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்த கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும்.
தனுசு - புதன்
மார்கழி 17-ந் தேதி, தனுசு ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும்போது எதிர்பாராத சில திருப்பங்கள் நடைபெறும். இடையூறுகள் அகலும். வருமானம் உயரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீங்கள் துணிந்து எடுத்த முடிவு, மற்றவர்களை ஆச்சரியப்பட செய்யும். 'வெளிநாட்டு அழைப்புகளை ஏற்றுக்கொள்ளலாமா?' என்ற சிந்தனை மேலோங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றங்கள் ஏற்படலாம். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு விழிப்புணர்ச்சி தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். கலைஞர்களுக்கு சமூகத்தில் அந்தஸ்து உயரும். மாணவ - மாணவிகள் அக்கறை செலுத்தினால்தான், படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். பெண்களுக்கு உடல்நிலையில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றலாம். விரயங்களை தவிர்க்க முடியாது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 25, 26, 30, 31, ஜனவரி: 6, 7, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.
கும்பம்
2024 கார்த்திகை மாத ராசிபலன்
சேவை செய்வதை பெருமையாகக் கருதும் கும்ப ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சனி, உங்கள் ராசியிலேயே பலம் பெற்று சஞ்சரிக்கிறார். அதே நேரம் செவ்வாயின் பார்வையும் உங்கள் ராசியில் பதிகிறது. எனவே பிரச்சினைகளுக்கு மத்தியில் முன்னேற்றம் ஏற்படும்.
தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். தன்னம்பிக்கையும், தைரியமும் குறையலாம். உடன்பிறப்புகளின் வழியில் செலவு அதிகரிக்கும். எதிர் காலத்தை பற்றிய பயம் அகல, இறை வழிபாடே கைகொடுக்கும்.
குரு வக்ரம்
ரிஷப ராசியில் உள்ள குரு பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. கொடுக்கல் - வாங்கல்களில் பிரச்சினைகள் உருவாகலாம்.
'கொடுத்த தொகையை வாங்க முடியவில்லையே, வாங்கிய தொகையை கொடுக்க முடியவில்லையே' என்ற கவலை மேலோங்கும். பணப்பற்றாக்குறை அதிகரிக்கும். அருளாளர்களின் ஆசியும், அனுபவஸ்தர்களின் அறிவுரையும் கைகொடுக்கும் நேரம் இது.
சனி - செவ்வாய் பார்வை
கடகத்தில் உள்ள செவ்வாய், இந்த மாதம் முழுவதும் கும்பத்தில் உள்ள சனியைப் பார்க்கிறார். உங்கள் ராசியில் உள்ள சனியை, பகைக் கிரகமான செவ்வாய் பார்க்கும் பொழுது மகிழ்ச்சி குறையும். மனக்கவலை அதிகரிக்கும். உடன்பிறப்புகளின் வழியில் பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். உதவி செய்வதாக சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம்.
தொழிலில் பங்கு தாரர்கள் விலகுவதாக சொல்லி அச்சுறுத்துவர். நரம்பு -எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களால் கவலை அதிகரிக்கும். இது போன்ற நேரங்களில் திசா புத்திக்கேற்ற தெய்வங்களை தேர்ந்தெடுத்து வழிபடுவது நல்லது.
மகர - சுக்ரன்
கார்த்திகை 18-ந் தேதி, மகர ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்திற்கு வரும் சுக்ரனால், விலை உயர்ந்த பொருட்களை விற்க வேண்டிய சூழல் உருவாகும். குறிப்பாக தொழில் நஷ்டத்தை ஈடுகட்ட வாங்கிய சொத்துக்களை விற்க வேண்டியதிருக்கும்.
பெண் வழி பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். இடமாற்றம், ஊர் மாற்றம் எளிதில் கிடைத்தாலும், அவை திருப்தி தருவதாக அமையாது. பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சியில் அனுகூலம் உண்டு. பொருளாதாரத்தை பொறுத்தவரை ஒரு தொகை செலவழிந்த பின்னரே, அடுத்த தொகை வந்துசேரும்.
செவ்வாய் வக்ரம்
கடக ராசியில் உள்ள செவ்வாய், கார்த்திகை 18-ந் தேதி வக்ரம் அடைகிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. தொழில் பங்குதாரர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்துகொள்ள மாட்டார்கள். உடன் பிறப்புகளின் பகை அதிகரிக்கும். பாகப்பிரிவினைகள் இழுபறி நிலையில் இருக்கும். பஞ்சாயத்துக்கள் நீடிக்கும்.
பழைய வழக்குகள் முடிவுற்றாலும் புதிய வழக்குகள் தொடரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளக்கூடாது. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்கள் வாடிக்கையாளர்களை அனுசரித்து கொள்வது நல்லது.
கலைஞர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு. மாணவ, மாணவியர்கள் பெற்றோர்களின் ஆசிரியர் களின் ஆலோசனை படி நடப்பது நல்லது. பெண்களுக்கு எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. குடும்பச் சுமை கூடும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 16, 17, 28, 29, டிசம்பர்: 3, 4, 10, 11.
மகிழ்ச்சி தரும் வண்ணம்: நீலம்.
கும்பம்
2024 ஐப்பசி மாத ராசிபலன்
உழைத்தால் உயரலாம் என்று சொல்லும் கும்ப ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசி நாதன் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். மாதத்தின் பிற்பாதியில் வக்ர நிவர்த்தியாகி பலம் பெறுகிறார். எனவே மாதத் தொடக்கத்தில் விரயங்களும், மனக்குழப்பங்களும் அதிகரித்தாலும் மாதத்தின் பிற்பகுதியில் வளர்ச்சி கூடும்.
மன நிறைவான வாழ்க்கை அமையும். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். தொல்லை தந்தவர் விலகுவர். ஆரோக்கியம் சீராகும். சென்ற மாதத்தில் நடைபெறாத காரியங்கள் இப்பொழுது படிப்படியாக நடைபெற தொடங்கும்.
செவ்வாய் நீச்சம்
ஐப்பசி 6-ந் தேதி கடக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். கடகம் செவ்வாய்க்கு நீச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. தொழில் மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உண்டு.
அதே நேரம் பழைய தொழிலில் உள்ள பங்குதாரர்களால் பிரச்சினைகள் ஏற்படலாம். சகோதர விரோதங்களை வளர்த்து கொள்ள வேண்டாம். ஒரு கடனைஅடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழல் உருவாகும். எதிர்காலத்தை பற்றிய பயம் அதிகரிக்கும்.
விருச்சிக புதன்
ஐப்பசி 8-ந் தேதி விருச்சிக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கு வரும் புதன் தொழில் வளம் பெருக வழிவகுத்துக் கொடுப்பார். திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறும். பிள்ளைகளின் கல்யாண கனவுகளை நனவாக்குவீர்கள்.
பூர்வீக சொத்து களை பங்கு பிரித்து கொள்வதில் இருந்த தடைகள் அகலும். புகழ்மிக்க ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வரவேண்டுமென்ற ஆசை நிறைவேறும். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
சனி வக்ர நிவர்த்தி
ஐப்பசி 18-ந் தேதி கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி வக்ர நிவர்த்தி ஆகிறார். இக்காலத்தில் ஏழரைச் சனி வலுவடைகிறது. எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. பொருளாதாரத்தில் ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம். முக்கிய பிரச்சினைகளுக்கு முடிவெடுக்க முடியாத சூழ்நிலை உருவாகலாம்.
நண்பர்கள் உதவி செய்வதாக சொல்லி கடைசி நேரத்தில் கையைவிரிப்பர். உடல் ஆரோக்கியத்தில் தொல்லைகள் அதிகரிக்கும். கைவலி, கால்வலி, மூட்டுவலி போன்ற வலிகள் வரலாம். மருத்துவ செலவு உண்டு. சுபச் செலவுகளை மேற்கொள்வதன் மூலம் வீண் விரயங்களிலிருந்து விடுபட இயலும்.
தனுசு சுக்ரன்
ஐப்பசி 22-ந் தேதி தனுசு ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 4,9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் நல்ல நேரம் தான். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. நல்ல நிறுவனங்களில் பணிபுரிய ஒரு சிலருக்கு வெளிநாட்டிலிருந்து அழைப்புகள் வரலாம்.
இடம் வாங்கி வீடு கட்டுவது அல்லது கட்டிய வீட்டை பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். பெண் வழி பிரச்சினைகள் அகலும். தொழில் வளர்ச்சி கூடும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மாதத்தின் பிற்பாதியில் நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்தபடியே முன்னேற்றம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி நிரந்தரம் பற்றிய நல்ல தகவல் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு நட்பால் நன்மை உண்டு. மாணவ, மாணவியர் களுக்கு படிப்பில் கவனம் தேவை. பெண்களுக்கு எதிர்காலம் பற்றிய பயம் அகலும். ஆரோக்கியம் சீராகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 20, 21, 30, 31, நவம்பர்: 6, 7, 12, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.
கும்பம்
2024 புரட்டாசி மாத ராசிபலன்
துணிவும் தன்னம்பிக்கையும் கொண்டு செயல்படும் கும்ப ராசி நேயர்களே!
புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். எனவே ஆரோக்கிய தொல்லை அதிகரிக்கும். அஷ்டமத்தில் கேது சஞ்சரிப்பதால் எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது.
வீண் வாக்குவாதங்களை தவிர்த்திடுங்கள். ஆரோக்கியம் சீராக, ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துங்கள். அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபாரப் போட்டிகளை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
சனி வக்ரம்
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசியிலேயே வக்ரம் பெற்று சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. திடீர் திடீரென மாற்றம் வந்து கொண்டே இருக்கும். வரவைக் காட்டிலும் செலவு கூடும். வாய்ப்புகள் வந்தாலும் உபயோகப்படுத்திக் கொள்ள இயலாது.
இக்காலத்தில் அனுபவஸ்தர்களின் ஆலோசனையும், அருளாளர்களின் அறிவுரைகளும் கைகொடுக்கும். புதியவர்களை நம்பி எதுவும் செய்ய இயலாது. புனித பயணங்களை மேற்கொள்வதில் தடைகள் ஏற்படலாம். மாதம் முழுவதும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து விநாயகர், அனுமன், சனி பகவான் ஆகியோரை வழிபடுவது நல்லது.
புதன் உச்சம்
புரட்டாசி 3-ந் தேதி, கன்னி ராசியில் புதன் உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம, அஷ்டமாதிபதியானவர் புதன். அவர் அஷ்டமத்தில் உச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. சில இடர்பாடுகளுக்கு மத்தியில் உங்கள் முன்னேற்றம் ஏற்படும். ஒரு சிலர் தொழிலில் ஏமாற்றத்தையும், இழப்புகளையும் சந்திப்பார்கள். புதியவர்களை நம்பி செய்த காரியம் அரைகுறையாக நிற்கும்.
பிள்ளைகளின் வருங்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் தாமதம் ஏற்படும். 'வரன்கள் முடிவாவது தள்ளிப்போகிறதே' என்று கவலைப்படுவீர்கள். இது போன்ற நேரங்களில் பொறுமையை கடைப்பிடிப்பதோடு, இறைவழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள்.
துலாம் - சுக்ரன்
புரட்டாசி 3-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அது சுக்ரனுக்கு சொந்த வீடாகும். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 9-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது எல்லாவிதமான நன்மைகளும் வந்துசேரும்.
பாக்கிய ஸ்தானம் வலுப் பெறுவதால், பிள்ளைகளின் முன்னேற்றம், தொழில் வளர்ச்சி, பொருளாதாரத்தில் உயர்வு போன்றவை திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம், இலாகா மாற்றம் வரலாம். எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்போடு பெருமை காண்பீர்கள்.
துலாம் - புதன்
புரட்டாசி 20-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். அவர் அங்குள்ள சுக்ரனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். இக்காலம் ஒரு பொற்காலமாகும். எண்ணங்கள் அனைத்தும் எளிதில் நிறைவேறும். ஆடை - ஆபரணச் சேர்க்கை உண்டு. வெளிநாட்டில் உள்ள பிரபல நிறுவனங்களில் இருந்து பணிபுரிய அழைப்புகள் வரலாம். பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும்.
உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். கொடுக்கல் - வாங்கல்கள் சிறப்பாக இருக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு, மாதத்தின் பிற்பாதி மகிழ்ச்சிக்குரியதாக அமையும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த இலக்கை அடைய வழிபிறக்கும். உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு உயர் அதிகாரிகள் நுணுக்கங்களை கற்றுக் கொடுப்பர்.
கலைஞர்களுக்கு, விலகிச் சென்ற ஒப்பந்தங்கள் மீண்டும் வரலாம். ஆசிரியர்களின் ஒத்துழைப்பால், மாணவ - மாணவிகள் கல்வியில் அக்கறை செலுத்துவர். பெண்களுக்கு ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
செப்டம்பர்: 19, 20, 23, 24, அக்டோபர்: 4, 5, 9, 10.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்
கும்பம்
2024 ஆவணி மாத ராசிபலன்
உதவும் குணத்தால் உயர்ந்து நிற்கும் கும்ப ராசி நேயர்களே!
ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே வக்ரம் பெற்றிருக்கிறார். மேலும் 2-ம் இடத்தில் ராகுவும், 8-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். எனவே சர்ப்பக்கிரகங்களின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது.
இந்த மாதம் ஏற்றமும் இறக்கமும் கலந்த நிலை உருவாகும். எவ்வளவு தான் வரவு வந்தாலும், அதை காட்டிலும் செலவு அதிகரிக்கும். ஆரோக்கிய தொல்லையின் காரணமாக அடிக்கடி மருத்துவச் செலவுகளும் ஏற்படும். இனம் புரியாத கவலை மேலோங்கும்.
சனி - சூரியன் பார்வை
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், இம்மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். சிம்மத்தில் சஞ்சரிக்கும் சூரியன் அவரை பார்க்கிறார். இந்த பகைக் கிரகங்களின் பார்வை அவ்வளவு நல்லதல்ல. மனக்குழப்பத்தை அதிகரிக்கச் செய்யும். விரயங்கள் கூடுதலாக இருக்கும். ஆரோக்கிய தொல்லை ஒரு புறம், அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வீண் பழிகள் மற்றொரு புறம் என்று சிக்கல்கள் உருவாகும்.
எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளை கொடுத்து சோதிப்பர். வருமான பற்றாக்குறை அதிகரிக்கும். வருங்காலத்தை பற்றிய பயம் எப்போதும் இருக்கும். இது போன்ற காலங்களில் சிறப்பு வழிபாடு தேவை. குல தெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு மேற்கொள்வதோடு, சனி பகவான் மற்றும் சூரிய பகவானையும் வழிபாடு செய்து வாருங்கள்.
சுக்ரன் நீச்சம்
ஆவணி 10-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. இன்பங்கள் குறையும். துணிவும் தன்னம்பிக்கையும் அதிகம் தேவைப்படும். குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு, ஆரோக்கிய குறைபாடு ஏற்படும். அதனால் மருத்துவச் செலவும் அதிகரிக்கும்.
வியாபாரத்தில் கடுமையான போட்டி நிலவும். எதையும் துணிந்து செய்ய இயலாது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடியும், அதனால் மனக் கலக்கமும் ஏற்படும். உங்கள் முன்னேற்றத்தை பற்றி சகப் பணியாளர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
மிதுன - செவ்வாய்
ஆவணி 10-ம் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு சகாய ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வருவது, ஒரு அற்புதமான நேரமாகும். குறிப்பாக தொழில் முன்னேற்றம், கேட்ட இடத்தில் உதவிகள் கிடைத்தல், சகோதர ஒத்துழைப்பு, இழப்புகளை ஈடுசெய்ய புதிய வழி, எதிர்பாராத நல்ல திருப்பம் போன்றவை ஏற்படும் நேரமிது. பொருளாதாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் மிக உயர்ந்த அந்தஸ்த்தை பெறுவீர்கள்.
சிம்ம - புதன்
ஆவணி 15-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வரும்போது நல்ல காரியங்கள் பலவும் நடைபெறும். வசதி வாய்ப்புகள் பெருகும். வாகன யோகம் உண்டு. மாமன், மைத்துனர் வழியில் இருந்த மனக்கசப்பு மாறும். வெளிநாட்டில் இருந்து தாய்நாடு வர முடியாமலும், தாய்நாட்டில் இருந்து வெளிநாடு செல்ல முடியாமலும் இருந்தவர்களுக்கு, இப்போது அந்த முயற்சி நிறைவேறும். குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதும், அதன்மூலம் உதிரி வருமானங்களும் உண்டு.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்து ஆதரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு ஒரு தொகை செலவழிந்த, பின்னரே அடுத்த தொகை கரங்களில் புரளும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமையும், மனச்சுமையும் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு தன்னம்பிக்கை தக்க பலன் தரும். மாணவ - மாணவிகளுக்கு மேற்படிப்பு சம்பந்தமாக எடுத்த முடிவு பலன் தரும். பெண்களுக்கு நினைத்தது நிறைவேறி நிம்மதி கிடைக்கும். அவ்வப்போது வரும் ஆரோக்கிய தொல்லைகள் மனதை வாட்டும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஆகஸ்டு: 17, 18, 22, 23, 27, 28, செப்டம்பர்: 7, 8, 12, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.
கும்பம்
ஆடி மாத ராசிபலன்
மாற்றங்களை பற்றி சிந்தித்துக் கொண்டே இருக்கும் கும்ப ராசி நேயர்களே!
ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். மேலும் 2-ல் ராகுவும் 8-ல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். எனவே ஆரோக்கியத் தொல்லையும், அதை முன்னிட்டு மருத் துவச் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் குறுக்கீடுகளும், எதிரிகளின் தொல்லைகளும் வந்து சேரும். நண்பர்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடக்க மாட்டார்கள். குடும்பப் பிரச்சினை கூடுதலாகி மன அமைதி குறையும். எதையும் உங்கள் நேரடிப்பார்வையில் வைத்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.
குரு - செவ்வாய் சேர்க்கை
மாதத் தொடக்கத்திலேயே குருவும், செவ்வாயும் இணைந்து, 4-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார்கள். எனவே 'குரு மங்கள யோகம்' உருவாகிறது. குடும்பத்தில் சுபகாரிய பேச்சுக்கள் கைகூடிவரும். இடம் வாங்குவது, வீடு கட்டுவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். சகோதரர்களின் ஒத்துழைப்போடு சில நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். குருவின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால் தொழிலை விரிவு செய்யவும், புதிய முதலீடுகள் செய்து வளர்ச்சி அடையவும் நினைப்பீர்கள். ஆனால் ஜென்மச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் எதிர்பார்த்த லாபம் கிடைப்பது அரிது. உழைப்புக்கேற்ற பலனை எதிர்பார்க்க இயலாது. அனுபவஸ்தர் களின் ஆலோசனைகள் இக்காலத்தில் கைகொடுக்கும்.
புதன்-வக்ரம்
கடக ராசியில் சஞ்சரிக்கும் புதன், ஆடி 5-ந் தேதி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங் களுக்கு அதிபதியானவர் புதன். பஞ்சமாதிபதியான அவர் வக்ரம் பெறுவதால், பூர்வீக சொத்துக்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் மீண்டும் தலைதூக்கும். எதிரிகளின் பலம் கூடும். லாபம் ஒரு வழியில் வந்தாலும், மற்றொரு வழியில் செலவு வந்துகொண்டே இருக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளால் சில பிரச்சினைகள் வந்துசேரும். எனவே அவர்களை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். அஷ்டமாதிபதியாகவும் புதன் இருப்பதால், அதன் வக்ர காலத்தில் மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். வீடு மாற்றம் நன்மை தரும்.
சிம்ம - சுக்ரன்
ஆடி 16-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வருவது நல்ல நேரம் தான். தொழில் மற்றும் வியாபாரத்தில் கணிசமான லாபம் கைகளில் புரளும். வாகன யோகம் உண்டு. புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டும் என்ற ஆசை நிறைவேறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. ஒரு சிலருக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.
பொதுவாழ்வில் உள்ளவர்கள் நிதானமாக செயல்படுவது நல்லது. வியாபாரம், தொழில் செய்பவர்கள், கணக்கு, வழக்குகளில் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மாதக் கடைசியில் மகிழ்ச்சியான தகவல் கிடைக்கும். கலைஞர்களுக்கு குறுக்கீடுகள் அதிகரிக்கும். மாணவ - மாணவிகளுக்கு, படிப்பில் அக்கறை தேவை. பெண்களுக்கு சுபச்செலவுகள் அதிகரிக்கும். துணிந்து எந்த முடிவையும் எடுக்க இயலாது.
பணத்தேவையை பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜூலை: 19, 20, 26, 27, 31, ஆகஸ்டு: 1, 10, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிளிப்பச்சை.
கும்பம்
ஆனி மாத ராசிபலன்
நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கும் கும்ப ராசி நேயர்களே!
ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவரது வக்ர காலத்தில் மிகுந்த விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும். உற்சாகம் குறையும். உடல்நல தொல்லை அதிகரிக்கும். அர்த்தாஷ்டம குருவின் ஆதிக்கமும் இருப்பதால் அதிகச் செலவு செய்யும் சூழலும் உருவாகும்.
சனி வக்ரம்
ஆனி 5-ந் தேதி, கும்ப ராசியில் சனி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிநாதனாகவும், விரயாதிபதியாகவும் விளங்குபவர் சனி பகவான். அவர் வக்ரம் பெறும் இந்த நேரத்தில் மனக் குழப்பம் அதிகரிக்கும். எதையும் துணிந்து செய்ய இயலாது. எந்த ஒரு காரியத்தையும் ஒரு முறைக்கு இருமுறை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். பொருளாதாரப் பற்றாக் குறையின் காரணமாக ஒரு சிலருக்கு கைமாற்று வாங்கும் சூழல் கூட உண்டாகும். உத்தியோகத்தில் நீண்ட தூரத்திற்கான மாறுதல் வரலாம். சாதாரண சிகிச்சையிலேயே குணம் பெற வேண்டிய உடல்நிலை, இப்பொழுது ரண சிகிச்சை செய்யக்கூடிய நிலைக்கு தள்ளப்படும். சனிக் கவசம் பாடி சனிக்கிழமை தோறும் சனி பகவானை வழிபட்டால் பணியில் இருக்கும் தொய்வு அகலும்.
கடக - புதன்
ஆனி 12-ந் தேதி, கடக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம - அஷ்டமாதிபதியான அவர், 6-ல் வரும்பொழுது எதிரிகள் விலகுவர். இல்லம் தேடி ஒரு நல்ல தகவல் வரலாம். ெவளிநாட்டு முயற்சி ஆதாயம் தரும். நம்பிக்கைக்குரியவர்கள் நல்லது நடக்க வழிகாட்டுவர். மாமன், மைத்துனர் வழியில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் நட்பால் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும்.
கடக - சுக்ரன்
ஆனி 23-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான அவர், 6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் தாய்வழி ஆதரவு உண்டு. பெற்றோர், உற்ற துணையாக இருப்பார்கள். பிரபலங்களின் தொடர்பால் பெருமை காண்பீர்கள். உத்தியோகம் மற்றும் தொழிலில் உயர்நிலை அடைய சந்தர்ப்பங்கள் கைகூடிவரும். மொத்தத்தில் இக்காலம் இனிய காலமாகவே அமையும். பணிபுரியும் இடத்தில் மறுக்கப்பட்ட சலுகைகள் உங்களுக்குக் கிடைக்கும்.
ரிஷப - செவ்வாய்
ஆனி 27-ந் தேதி, ரிஷப ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதி யானவர் செவ்வாய். அவர் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்போது 'குருமங்கள யோகம்' உருவாகிறது. எனவே இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும் வாய்ப்பு உண்டு. 'வாசல் தேடி வந்த வரன்கள் திரும்பிச் சென்று விட்டதே' என்று கவலைப்பட்டவர்கள், இப்பொழுது மகிழ்ச்சி அடையும் விதத்தில் மணமாலை சூடும் வாய்ப்பு வரப்போகிறது. தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உடன்பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவர்.
பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்து நிர்ப்பந்தம் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் செய்பவர் களுக்கு அதை விரிவு செய்ய போதுமான பொருளாதாரம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊர் மாற்றம் உறுதியாகலாம். கலைஞர்களுக்கு நிதிப் பற்றாக்குறை அகலும். மாணவ - மாணவிகளுக்கு ஆசிரிய பெருமக்களின் அறிவுரை முன்னேற்றம் வழங்கும். பெண் களுக்கு வரவைக் காட்டிலும் செலவு கூடும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜூன்: 17, 18, 22, 23, 29, 30, ஜூலை: 3, 4, 15, 16.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.