ஆன்மிக களஞ்சியம்

வட மாநில மக்களை கவர்ந்த ராமேஸ்வரம்

Published On 2023-09-15 09:48 GMT   |   Update On 2023-09-15 09:48 GMT
  • இந்த ஆலயமானது வட மாநில மக்களை மிகவும் கவர்ந்துள்ளது.
  • இது நமது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

இத்தலமானது மூர்த்தி ஸ்தலம், தீர்த்தம் என்ற மூன்றுக்கும் கீர்த்தி வாய்ந்தது.

இத்தலத்தில் உள்ள சுவாமிகள் ராமேஸ்வரர் ராமலிங்கேசுவரர், ராமநாதர் என்ற பல பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.

இந்த ஆலயமானது வட மாநில மக்களை மிகவும் கவர்ந்துள்ளது.

வடநாட்டவர்கள் காசியில் உள்ள விசுவநாதருக்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்து பூஜை செய்து, அங்கிருந்து கங்கை ஜலத்துடன் ராமேஸ்வரம் ராமனாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து, தங்கள் யாத்திரையை பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.

அதேபோல் தமிழ்நாட்டில் இருந்து காசிக்கு செல்ல இருப்பவர்கள் முதலில் ராமேஸ்வரத்திற்கு சென்று,

இங்குள்ள புனித தீர்த்தங்களில் நீராடி இறைவனை வழிபடுவதுடன் இங்கிருந்து மணல் எடுத்து அதற்கு பூஜை செய்து அதை எடுத்துக் கொண்டு போய் பிரயாகை திரிவேணி சங்கமம் என்ற இடத்தில் போட்டுவிட்டு,

காசி விசுவநாதரை தரிசனம் செய்துவிட்டு, அங்கிருந்து கங்கை ஜலத்தை கொணர்ந்து ராமநாதசுவாமி அபிஷேகம் செய்து வழிபடுவதுடன் தங்களுடைய காசி, ராமேஸ்வரம் யாத்திரையை பூர்த்தி செய்வர்.

இதன்மூலம் இவ்வூரின் பெருமையால், இது அனைத்திந்ததிய மக்களை ஒன்றாக இணைத்து நமது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இங்கு வந்து இங்குள்ள புனித தீர்த்தங்களில் நீராடி, சர்ப்ப சாந்தி, நாக பிரதிஷ்ட முதலியவை செய்து சுவாமி தரிசனம் செய்தால் மக்கள் செல்வம் ஏற்படும் என்ற நம்பிக்கை நம் மக்களிடம் உண்டு.

Tags:    

Similar News