ஆன்மிக களஞ்சியம்

ராமேசுவரம் கடலில் புனித நீராடுவது ஏன்?

Published On 2023-09-15 09:59 GMT   |   Update On 2023-09-15 09:59 GMT
  • ‘படிக லிங்க தரிசனம், கோடி பாப விமோசனம்’.
  • ராமர் தன் வில்லால் உருவாக்கிய ‘கோடி தீர்த்தம்’ அமைந்துள்ளது.

ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான ராமேசுவரம் சம்பந்தர், அப்பரால் பாடல் பெற்றதாகும்.

இத்தல மூலவர் சன்னிதியில் உள்ள படிக லிங்கத்திற்கு தினமும் ஆறு கால பூஜை நடக்கிறது.

'படிக லிங்க தரிசனம், கோடி பாப விமோசனம்'.

இந்த படிக லிங்கம் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும்.

எத்தகைய கொடிய தோஷமாக இருந்தாலும், ராமேசுவரம் கடலில் நீராடி எழுந்து, ஈசனை வழிபட்டால் உடனே விலகும் என்பது நம்பிக்கை.

இங்குள்ள அக்னி தலத்தில் நீராடி அந்த கடல் மண்ணில் சிவலிங்கம் பிடித்து பூஜித்து வழிபட்டால் முற்பிறவி, இப்பிறவி தோஷங்கள் விலகும் என்பதுவும் நம்பிக்கையாக இருக்கிறது.

ராமேசுவரம் ராமலிங்க சுவாமி கோவிலில் விசாலாட்சி அம்மன் சன்னதி இருக்கிறது.

இந்த சன்னதியின் அருகில், ராமர் தன் வில்லால் உருவாக்கிய 'கோடி தீர்த்தம்' அமைந்துள்ளது.

சிவலிங்க பிரதிஷ்டையின் போது ராமர், இந்த தீர்த்த நீரையே பயன்படுத்தியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது.

வட இந்தியாவில் இருந்து வரும் பக்தர்கள் கங்கை நீரை கொண்டு, இங்குள்ள ராமலிங்கத்தையும், இங்குள்ள கோடி தீர்த்தத்தை எடுத்துச் சென்று காசியில் உள்ள காசி விஸ்வநாதரையும் பூஜிப்பது வழக்கமாக நடைபெற்றுவரும் நிகழ்வாகும்.

Tags:    

Similar News