ஆன்மிக களஞ்சியம்

பிரசாதம் வாங்கினால் குழந்தை பாக்கியம்-தேன்கனிக்கோட்டை பேட்டராய சுவாமி கோவில்!

Published On 2023-08-25 09:37 GMT   |   Update On 2023-08-25 09:37 GMT
  • ஸ்ரீ ராமபிரான் 3 நாட்கள் வசித்த திருத்தலம்.
  • இத்திருத்தலம் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில் ஆகும்.

பிரசாதம் வாங்கினால் குழந்தை பாக்கியம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டையில் பழமையான பிரசித்திப் பெற்ற ஸ்ரீ சவுந்தரர்யவல்லி தாயார் சமேதய ஸ்ரீ பேட்டராய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலின் மூலவர் ஸ்ரீ வேட்டையாடிய பிரான் (பேட்டராய சுவாமி), ஸ்ரீ தேவி, பூதேவி சமேதரராய் அருள்பாலிக்கிறார்.

தென் திசையில் ஸ்ரீ சவுந்தர்யவல்லி நாச்சியார் எழுந்தருளியுள்ளார்.

ஆழ்வார்கள், ஸ்ரீ வேதாந்த தேசிகர், ருக்மணி, சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால் சாமி, சீதாலட்சுமண சமேத ஸ்ரீ ராமபிரான், வீர ஆஞ்சநேயர், ஸ்ரீ விநாயகர் மற்றும் மலைக்குகையில் ஸ்ரீ கஜலட்சுமி நரசிம்மர் சந்நதிகளும் உள்ளன.

ஸ்ரீ ராமபிரான் 3 நாட்கள் வசித்த திருத்தலம்.

இதனால் இத்திருத்தலம் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில் ஆகும்.

சகல தீவினைகளையும் போக்கி நல்ல சுகபோகங்களையும் அள்ளித் தருகிறார்.

இக்கோவிலின் பிரகாரம் 235 அடி அகலம் உள்ளவை.

தெற்கு மதிலின் நீளம் 204 அடியாகும். கிழக்கு மதிலின் நீளம் 244 அடியாகும்.

கோவிலின் தலைவாசல் கிழக்கு திசையை நோக்கி உள்ளது.

எம்பெருமான் திருப்பதி கோவிலில் உள்ளபடி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

108 திவ்ய தேசங்களில் முக்கியமான நான்கு திவ்ய தேசங்களான கோவில் ஸ்ரீரங்கம், திருமலை (திருப்பதி), பெருமாள் கோவில் (காஞ்சி), திருநாராயணபுரம் (மேல்கோட்டை) ஆகும்.

இந்த நான்கு திவ்ய தேச சம்பந்தமும் ஒருங்கிணைந்த ஒரே சேத்திரம் டெங்கனிபுரம் ஆகும்.

இக்கோயில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் செய்யும் பூஜைகளை போலவும்பஞ்சராத்ர ஆகம முறைப்படி பூஜைகளும் ஆராதனைகளும் இங்கு பெருமாளுக்கு ஏக்கார்த்தி, கும்பார்த்தி, தேரார்த்தி ஆகிய ஆரத்திகள் எடுக்கின்றனர்.

இந்த ஆகம பூஜைகள் பரம்பரையாக நடந்து வருகிறது.

இக்கோயிலில் மூலவர் திருமலை வேங்கடவன் வேட்டையாடி வந்து நின்ற கோலத்தில் நிலைத்துள்ளார்.

உற்சவ மூர்த்தியாக காஞ்சிபுரம் வரதராஜர் பேட்டராய சுவாமியாக அருள் பாலிக்கிறார்.

திருநாராயபுரம் ஆயி சாமிகள் மங்கலாசனம் செய்து மணவாள மாமுனிகளை சந்தித்த சேத்திரம்.

இங்கு உகாதிபண்டிகை (தெலுங்கு வருட பிறப்பு) ஆன பின் 11 நாட்களில் பூரம் நட்சத்திரத்தில் தேர்த்திருவிழா மிக விமரிசையாக நடைபெறும்.

தேர்த் திருவிழாவிற்கு முன்பு கருட பிரதிஷ்டை நடைபெறும்.

அப்போது குழந்தை இல்லாதவர்கள் சுவாமியை மனம் உருகி வேண்டி பிரசாதம் வாங்கினால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.

இதனால் ஆண்டு தோறும் இந்நிகழ்ச்சியின் போது ஏராளமானபக்தர்கள் கலந்து கொண்டு பிரசாதம் வாங்குவது பரம்பரையாக நடந்து வருகிறது.

Tags:    

Similar News