ஆன்மிக களஞ்சியம்
null

முருகப்பெருமானின் 7வது படை வீடாக விளங்கும் மருதமலை கோவில்

Published On 2023-09-11 17:14 IST   |   Update On 2023-09-11 17:20:00 IST
  • மருதமலை மூன்று புறங்களிலும் மலையரண்களால் சூழப்பெற்றுள்ளது.
  • தமிழ் கடவுளாம் முருகப் பெருமானுக்கு ஆறுபடை வீடுகள் உள்ளன.

தமிழ் கடவுளாம் முருகப் பெருமானுக்கு ஆறுபடை வீடுகள் உள்ளன.

இதில் 7வது படைவீடாக மருத மலை முருகன் கோவில் தனிச் சிறப்புடன் திகழ்ந்து வருகிறது.

கோவை மாநகரின் மேற்கே சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் அமைப்பில் இக்கோவில் அமைந்துள்ளது.

மருதமலை மூன்று புறங்களிலும் மலையரண்களால் சூழப்பெற்றுள்ளது.

இந்த கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மலைகளின் இயற்கை அமைப்புகளுடன் சேர்ந்து பார்க்கும்போது மயிலை தோகை விரித்தாற் போல் காட்சி அளிக்கிறது.

இதனால் முருகன் மயில் மீது அமர்ந்த தோற்றம் நம் கண் முன்னால் வருகிறது.

மருத மரங்கள் அதிகமாக காணபடுவதால் இந்த மலை மருதமால்வரை, மருதவரை, மருதவேற்பு, மருதக்குன்று , மருத லோங்கல், கமற் பிறங்கு, மருதாசலம் வேள் வரை என்றெல்லாம் பேரூர் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

மருதமலை ஆண்டவன் என்று அழைக்கப்படுவதற்கு காரணம், மருத மரங்கள் நிறைந்த இந்த மலைக்கு தலைவன் என்பதாகும்.

மருதமலையான், மருதப்பன், மருதாசல மூர்த்தி போன்ற திருப்பெயர்களாலும் இம்மலையில் எழுந்தருளியுள்ள முருகன் அழைக்கப்படுகிறார்.

Tags:    

Similar News