ஆன்மிக களஞ்சியம்

சித்தர்கள் வழிபட்ட 'பாலா திரிபுரசுந்தரி'

Published On 2025-11-23 09:00 IST   |   Update On 2025-11-23 09:00:00 IST
  • மனிதர்கள் மட்டுமின்றி அகத்தியர் உள்பட பல்வேறு சித்தர்களும் இந்த அம்பிகையை வழிபட்டுள்ளனர்.
  • பாலா திரிபுரசுந்தரியை வழிபட்டால் வீட்டில் சகல விதமான ஐஸ்வர்யங்களும் பெருகும்

ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாகிய பராசக்தி தானே விரும்பி எடுத்துக்கொண்ட குழந்தை பருவ வடிவமே ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி.

இவள் 10 வயது சிறு பெண் தோற்றம் கொண்டு பட்டுப்பாவாடை, சட்டை, மூக்குத்தி, ரத்ன அலங்காரங்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். பாலா என்பது சமஸ்கிருத சொல்லாகும்.

இவளுக்கு 'வாலை அம்மன்' என்ற பெயரும் உண்டு. பாலா திரிபுரசுந்தரியை வழிபட்டால் வீட்டில் சகல விதமான ஐஸ்வர்யங்களும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இவளை நம்பிக்கையுடன் வழிபடுபவர்களின் வீட்டில் ஒருத்தியாக, குழந்தையாக, தாயாக வந்து அருள் செய்யக்கூடியவள்.

மனிதர்கள் மட்டுமின்றி அகத்தியர் உள்பட பல்வேறு சித்தர்களும் இந்த அம்பிகையை வழிபட்டுள்ளனர். மேலும், இந்த அம்பிகையை அனைத்து சித்தர்களும் போற்றி பாடியும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

Similar News