என் மலர்
நீங்கள் தேடியது "Bala Tripurasundari"
- மனிதர்கள் மட்டுமின்றி அகத்தியர் உள்பட பல்வேறு சித்தர்களும் இந்த அம்பிகையை வழிபட்டுள்ளனர்.
- பாலா திரிபுரசுந்தரியை வழிபட்டால் வீட்டில் சகல விதமான ஐஸ்வர்யங்களும் பெருகும்
ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாகிய பராசக்தி தானே விரும்பி எடுத்துக்கொண்ட குழந்தை பருவ வடிவமே ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி.
இவள் 10 வயது சிறு பெண் தோற்றம் கொண்டு பட்டுப்பாவாடை, சட்டை, மூக்குத்தி, ரத்ன அலங்காரங்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். பாலா என்பது சமஸ்கிருத சொல்லாகும்.
இவளுக்கு 'வாலை அம்மன்' என்ற பெயரும் உண்டு. பாலா திரிபுரசுந்தரியை வழிபட்டால் வீட்டில் சகல விதமான ஐஸ்வர்யங்களும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இவளை நம்பிக்கையுடன் வழிபடுபவர்களின் வீட்டில் ஒருத்தியாக, குழந்தையாக, தாயாக வந்து அருள் செய்யக்கூடியவள்.
மனிதர்கள் மட்டுமின்றி அகத்தியர் உள்பட பல்வேறு சித்தர்களும் இந்த அம்பிகையை வழிபட்டுள்ளனர். மேலும், இந்த அம்பிகையை அனைத்து சித்தர்களும் போற்றி பாடியும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
- பெண்களுக்கான சாம்ராஜ்யம் இந்த ஆலயம்.
- பாலாவின் தேன் பிரசாதம் படிக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும்.
வட திருவானைக்கா என வழங்கும் செம்பாக்கம் என்ற இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமம், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் இருந்து சுமார் 7 கி.மீ. தூரத்தில் உள்ளது. எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென கண்களுக்கு குளிர்ச்சி தரும் வயல்வெளி பகுதிகள். நேர்த்தியான தெருக்கள் கொண்ட இந்த சின்னஞ்சிறு கிராமத்தில் மிகவும் சக்தி வாய்ந்த கோவிலாக ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி விசுவரூப மூலிகை அம்மன் கோவில் அழகிய வடிவில் கம்பீரமாக உள்ளது அந்த ஊருக்கே கிடைத்த பெருமை.
ஒரு பிரமாண்ட அரண்மனை தோற்றத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த ஆலயத்தில் அம்பாள் குழந்தை, குமரி, தாய் என மூன்று வடிவங்களில் பக்தர்களுக்கு காட்சி தருகிறாள். இந்த அம்பிகையை வணங்கினால் நோயற்ற வாழ்வு தருவாள் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.
* குழந்தைகள் கல்வி, கலை, ஞானம், வெற்றி, ஞாபக சக்தி பெறுவதற்காக வித்யா அபிவிருத்தி அர்ச்சனை ஹோமங்கள் நடைபெறுகின்றன.
* குழந்தைகளின் பரதநாட்டிய அரங்கேற்றம், பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள், சலங்கை பூஜைகள் நடைபெறுகின்றது.
*கல்வியில் மேம்பட வெண் தாமரை அல்லது வெள்ளை நிறமலர்களால் அர்ச்சனையும் நெய் தீபமும் ஏற்றி வழிபடுகின்றனர். படிக்கும் குழந்தைகள், பேனா, பென்சில், புத்தகம், நோட்டு வைத்து பிரார்த்தனை செய்து வழிபட்டு செல்கின்றனர். பாலாவின் தேன் பிரசாதம் படிக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும்.
* திருமணம் கைகூட ஸ்ரீ பாலா சந்நிதியில் கல்யாண ஜோடி மரப்பாச்சி பொம்மைகளை வைத்து, சிவப்பு மாலைகள் சாற்றி மாவிளக்கு தீபமேற்றி வழிபட்டால் திருமணம் கை கூடும்.
* பெண்களுக்கான சாம்ராஜ்யம் இந்த ஆலயம். இங்கு அனைத்தும் பெண் சக்திகளே. குழந்தை, குமரி, தாயாக, மந்திரியாக, தளபதியாக, காவலாளியாக, இளவரசியாக திரிபுர சுந்தரி எழுந்தருளியுள்ள ராஜ தர்பார்.
* குழந்தைகளின் பிறந்த நாளில் அபிஷேகம், அர்ச்சனை, அன்னதானம் செய்து வழிபடுகின்றனர்.
* நோயுற்றவர்கள் குணமடைய மூலிகை யம்பாள் பவுர்ணமி அருட்பிரசாதம் பெற்று பயன் பெறுகின்றனர்.
* மாதம் தோறும் பவுர்ணமியில் ஸ்ரீ பாலா மூல மந்திர ஹோமம் படிக லிங்கத்திற்கு அபி ஷேகம் செய்த தீர்த்த பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
அமைவிடம்
ஸ்ரீமத் ஒளஷத லலிதா மகா திரிபுரசுந்தரி ஸ்ரீசக்ரராஜசபை - ஸ்ரீபீடம் ஸ்ரீபாலா சமஸ்தான ஆலயம்,
திருப்போரூர் (ஓ.எம்.ஆர்)- செங்கல்பட்டு சாலை,
செம்பாக்கம், திருப்போரூர் தாலுகா,
செங்கல்பட்டு மாவட்டம்-603 108.
(திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் அமைந்துள்ளது செம்பாக்கம்.)






