ஆன்மிக களஞ்சியம்

மேல்மலையனூர் - முதல் சக்தி பீடம்!

Published On 2023-08-27 08:43 GMT   |   Update On 2023-08-27 08:43 GMT
  • தேவியின் வலதுகையில் புஜம் முதலில் விழுந்த இடமே இதுதான்.
  • தண்டகாருண்யத்தின் மையப்பகுதியான இடமே மேல்மலையனூர் ஆகும்.

மேல்மலையனூர் - முதல் சக்தி பீடம்

ஆதி சதுர்யுகத்தில் கிரேதா யுதத்திற்கு முன்பான மணியுகத்தில் முதல் மூர்த்தியான சிவபெருமானின் பிரமஹத்தி தோசம் நீக்கியும், கலியுக மாந்தர்களுக்கு அருள்பாலிக்கும் பொருட்டும் அன்னை பராசக்தி சிவ சுயம்பு மண் புற்றுவாக திரு அவதாரம் செய்து ஸ்ரீ அங்காளம்மனாக அருள்பாலிக்கும் புண்ணியத் தலமே மேல்மலையனூர் ஆகும்.

சிவபெருமான் தாட்சாயணி தேவியின் பூத உடலை சுமந்து நர்த்தன தாண்டவம் ஆடியபோது தாட்சாயணி தேவியின் வலதுகையில் புஜம் முதலில் விழுந்த இடமே, தண்டகாரண்யம் என்ற இந்த மேல்மலையனூர் ஆகும்.

போளூர், திருவண்ணாமலை, ஆரணி, செஞ்சி, திண்டிவனம், விழுப்புரம் போன்ற நகரப் பகுதிகளை உள்ளடக்கிய மிக பரந்த பரப்யையே ஆதியில் தண்டகாருண்யம் என்று அழைத்தனர்.

தண்டகாருண்யத்தின் மையப்பகுதியான இடமே இன்றைய மேல்மலையனூர் ஆகும்.

Tags:    

Similar News