ஆன்மிக களஞ்சியம்

மந்த நிலையை நீக்கும் திருவலம் வில்வநாதீஸ்வரர்!

Published On 2023-08-25 11:55 GMT   |   Update On 2023-08-25 11:55 GMT
  • சிவனின் பெயர் வில்வநாதீஸ்வரர் என்பதால் இங்கு பிரசாதமாக வில்வம் தரப்படுகிறது.
  • இங்குள்ள தல விநாயகர் கனி வாங்கிய பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார்.

மந்த நிலையை நீக்கும் திருவலம் வில்வநாதீஸ்வரர்

வேலூரில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தூரத்தில் வில்வநாதீஸ்வரர் ஆலயம் உள்ளது.

சிவனின் பெயர் வில்வநாதீஸ்வரர் என்பதால் இங்கு பிரசாதமாக வில்வம் தரப்படுகிறது.

இதை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், மந்த புத்தி நீங்கும், தோல் சம்மந்தப்பட்ட நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.

சுவாமி, அம்மன் இருவருக்கும் அபிஷேகம் செய்து புதுவஸ்திரம் சாற்றி பக்தர்கள் வழிபடுகின்றனர்.

குடும்பத்தில் மந்த நிலையில் இருப்பவர்களை இங்கு அழைத்து வந்து சுவாமியை தரிசனம் செய்ய வைத்து வில்வம் பிரசாதமாக தருகின்றனர்.

இதனை சாப்பிட்டவர்கள் மந்த நிலையில் இருந்து மீளப்படுவதாக கூறப்படுகிறது.

இங்குள்ள தல விநாயகர் கனி வாங்கிய பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார்.

அதற்கு தகுந்தார் போல் துதிக்கையில் மாங்கனியை வைத்து வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

முருகனுக்கும், விநாயகருக்கும் சிவன் வைத்த போட்டியில் வென்ற விநாயகர் ஞானப்பழத்துடன் இத்தலத்தில் வந்து அமர்ந்ததாக வரலாறு.

தேவாரப்பாடல் பெற்ற 32 திருத்தலங்களில் தொண்டை நாட்டுப்பாடல் பெற்ற தலங்களின் வரிசையில் 10 வது தலமாக வைத்து போற்றப் பெறும் சிறப்புடையது திருவல்லம்.

இந்த ஊருக்குள் நிலா நதி ஓடுகிறது. நதியின் கரையிலேயே கோவில் உள்ளது.

திருமாலும், நான்முகனும், விண்ணுலகத்தார், மண்ணுலகத் தார் அனைவரும் இங்கு வந்து வணங்குவதாக கூறப்படுகிறது.

எனவே இத்தலம் காசிக்கு நிகராகக் கருதப்படும் சிறப்பு வாய்ந்தது.

சிவானந்த மௌனகுரு சுவாமி இங்குள்ள பலாமரத்தின் அடியில் அமர்ந்து தவம் செய்து இறைவனின் அருள் பெற்றுள்ளார்.

Tags:    

Similar News