ஆன்மிக களஞ்சியம்

இந்திரன் நீராடிய சீதா குண்டம் தீர்த்தம்

Published On 2023-09-15 11:39 GMT   |   Update On 2023-09-15 11:39 GMT
  • அரம்பை, கபி தீர்த்தத்தில் நீராடி சாப விமோசனம் பெற்றாள்.
  • இந்திரன் இத்தீர்த்தத்தில் நீராடி பிரமஹத்தியை நீக்கிக் கொண்டான்.

சக்கர தீர்த்தம்

இத்தீர்த்தம், தேவி பட்டினத்திலுள்ள திருக்குளம்.

இங்குக் காலவ முனிவர் தவம் செய்ததாகவும், சக்கரத்தாழ்வார் சாப விமோசனம் அடைந்ததாகவும் கூறப்படுகின்றது.

வேதாளவரத தீர்த்தம்

மண்டபம் ரெயில் நிலையத்திலிருந்து வெற்றிலை மண்டபம் என்னும் ஊர் சென்று, அங்கிருந்து இரண்டு கல் தொலைவிலுள்ள வேதாளை என்னும் இடத்தில் இத்தீர்த்தம் உள்ளது.

சுதரிசனன் என்னும் கந்தருவன் இத்தீர்த்தத்தில் நீராடி வேதாள உருவத்திலிருந்து நீங்கினான்.

பாபவிநாச தீர்த்தம்

மண்டபம் ரெயில் நிலையத்திலிருந்து வெற்றிலை மண்டபம் சென்றால், அங்குள்ள கடலுக்கு அருகே இத்தீர்த்தம் அமைந்துள்ளது. இத்தீர்த்தத்தில் நீராடியவர்கள் எல்லாப் பாவங்களும் நீங்கப் பெறுவார்கள்.

பைரவ, கபி தீர்த்தங்கள்

பாம்பன் ரெயில் நிலையத்திலிருந்து இத்தீர்த்தங்கட்டுக்குச் செல்ல வேண்டும்.

அரம்பை, கபி தீர்த்தத்தில் நீராடி சாப விமோசனம் பெற்றாள்.

சீதா குண்டம் தீர்த்தம்

கபி தீர்த்தத்திற்குக் கிழக்கே சீதா குண்டம் என்னும் தீர்த்தம் அமைந்துள்ளது.

இந்திரன் இத்தீர்த்தத்தில் நீராடி பிரமஹத்தியை நீக்கிக் கொண்டான்.

Tags:    

Similar News