ஆன்மிக களஞ்சியம்

அட்சய திருதியை நாளில் புண்ணியத்தை சேருங்கள்

Published On 2023-09-16 06:55 GMT   |   Update On 2023-09-16 06:55 GMT
  • அன்னதானத்துக்கும், தண்ணீர் தானத்துக்கும் மிஞ்சிய தானமில்லை என்று சொல்வார்கள்.
  • வைகாசியில் தேய்பிறையில் பவுர்ணமி நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுகிறது.

அட்சய திருதியை என்பது இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும்.

அது வைகாசியில் தேய்பிறையில் பவுர்ணமி நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுகிறது.

அட்சயம் என்றால் குறைவற்றது, வளர்வது எனப்பொருள். வைகாசி மாதம் வளர்பிறை திருதியை அட்சய திருதியை என்று அழைப்படுகிறது.

அட்சய திருதியை தினத்தன்று தெய்வங்களுக்கு செய்யப்படும் பூஜைகள், ஜபங்கள், ஹோமங்கள் மற்றும் ஏழைகளுக்கு செய்யப்படும் தானங்கள் உதவிகள் ஆகிய அனைத்தும் அட்சயமாக வளர்ந்து பலனைத் தரும்.

குறிப்பாக ஒரு சொம்பு அல்லது பாத்திரம் நிறைய தண்ணீரை ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும்.

இதற்கு தர்ம கட தானம் எனப்பெயர்.

புண்ணியத்தை சேர்த்துக் கொள்வதற்காகவும், பித்ருக்களின் திருப்திக்காகவும் தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தை தானம் செய்கிறேன் என சங்கல்பம் செய்து கொண்டு ஒரு சொம்பு அல்லது பாத்திரத்தில் ஏலக்காய் முதலிய வாசனை திரவியங்களுடன் கூடிய சுத்தமான தண்ணீரை நிரப்பி, அதை ஏழைகளுக்கு தந்துவிட வேண்டும்.

அட்சய திருதியை தினத்தன்று வீட்டின் வாசலில் தண்ணீர் பந்தல் அமைத்தோ, ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி வைத்தோ, அனைவருக்கும் குடிக்க தண்ணீர் தருவது மிகுந்த புண்ணியத்தை தரும்.

அன்னதானத்துக்கும், தண்ணீர் தானத்துக்கும் மிஞ்சிய தானமில்லை என்று சொல்வார்கள்.

பசியுடன் கூடிய அனைவருக்கும் அன்னதானம், தண்ணீர் தானம் செய்ய வேண்டும்.

இதில் ஜாதி, மத, இன, கல்வி, பாகுபாடு பார்க்கக் கூடாது.

தாகத்தோடு வருபவர்களுக்கு குடிக்க தண்ணீர் தருவது புண்ணியத்தை தந்து, நமது விருப்பத்தை நிறைவேற்றும்.

அது இறந்த முன்னோர்களுக்கு உண்டாகும் தாகத்தையும் தனித்து அவர்களுக்கும் நல்ல கதியை உண்டாக்கும்.

மேலும் விசிறி, குடை, செருப்பு, பானகம், நீர் மோர் ஆகியவற்றையும் ஏழைகளுக்கு தானமாக அளிக்கலாம்.

ஆகவே அட்சய திருதியை தினத்தன்று வெயிலில் தவிக்கும் 10 பேருக்காவது குடிக்க தண்ணீர் கொடுப்பதும்,

காய்ந்து போன செடிகள், கொடிகள், மரங்களுக்கு தண்ணீர் விடுவதும் மிகவும் சிறந்தது.

அட்சய திருதியை அன்று செய்யப்படும் பூஜை, ஜபம், ஹோமம், பாராயணம், பித்ரு தர்ப்பணம் மற்றும் ஏழைகளுக்கு செய்யப்படும் தானம் உதவி, ஆகிய ஆறும் அட்சயமாக பலனைத்தரும்.

இதனால் கிடைக்கும் பலன் நமக்கும் நம்மைத் தொடர்ந்து நம் சந்ததிகளுக்கும் அடுத்தடுத்த ஜென்மங்களிலும் குறைவின்றி அட்சயமாக கிடைக்கும்.

Tags:    

Similar News