என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சேது மாதவ தீர்த்தம்
    X

    சேது மாதவ தீர்த்தம்

    • ஞான சுருதி மன்னன் இத்தீர்த்தங்களில் நீராடி ஞானம் பெற்றான்.
    • இத்தீர்த்தங்களில் நீராடியவர்கள் யாக பலன்களையும், செல்வத்தையும்,பெறுவார்கள்.

    இத்தீர்த்தம், மேற்கு மூன்றாம் பிரகாரத்தில் சேதுமாதவர் கோயிலுக்குத் தென்புறமுள்ள அழகிய திருக்குளம்.

    இத்தீர்த்தத்தில் நீராடியவர்கள் திருமகள் அருளும், சித்த சுத்தியும் பெறுவார்கள்.

    ஐந்து தீர்த்தங்கள்

    கந்தமாதன தீர்த்தம், கவாட்ச தீர்த்தம், கவய தீர்த்தம், நளதீர்த்தம், நீல தீர்த்தம் என்னும் ஐந்து தீர்த்தங்களும் சேது மாதவர் கோயிலைச் சுற்றி அமைந்திருக்கின்றன.

    இத்தீர்த்தங்களில் நீராடியவர்கள் யாக பலன்களையும், வறுமை நீங்கிச் செல்வத்தையும், வீடு பேற்றையும் பெறுவார்கள்.

    கங்கை, யமுனை, கயை தீர்த்தங்கள்

    இத்தீர்த்தங்களும் வடக்கு உட்பிரகாரத்தில் அமைந்துள்ளன.

    ஞான சுருதி மன்னன் இத்தீர்த்தங்களில் நீராடி ஞானம் பெற்றான்.

    Next Story
    ×