என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில்-தல வரலாறு
    X

    ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில்-தல வரலாறு

    • ராமர் ஆஞ்சநேயரிடம் கைலாச பர்வதத்திற்கு சென்று சிவலிங்கம் கொண்டு வரும்படி கட்டளையிட்டார்.
    • சீதாதேவி மணலால் பிடித்து வைத்திருந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜையை தொடங்கினர்.

    ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் தமிழ்நாட்டு மக்களை மட்டுமின்றி, வெளிநாட்டவரையும் கவரத்தக்க வகையில் பண்டைகால திராவிட கலாசாரத்தை எடுத்துக் காட்டும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது.

    ராமபிரான் ராவணனை சம்ஹாரம் செய்த காரணத்தால் அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.

    அந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்க அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி ராமர், ராமேஸ்வரம் வந்து சிவலிங்கத்தை பூஜை செய்து வழிபட்டால் பிரம்ம ஹத்தி தோஷம் நீங்குமென்று கூறினார்.

    உடனே, ராமர் ஆஞ்சநேயரிடம் கைலாச பர்வதத்திற்கு சென்று சிவலிங்கம் கொண்டு வரும்படி கட்டளையிட்டார்.

    அதன்படி ஆஞ்சநேயர் கைலாச பர்வதத்திற்கு சென்றார்.

    லிங்கத்தை கொண்டு வர சற்று தாமதமானதும் சீதாபிராட்டி விளையாட்டாக மண்ணை கையில் பிடித்து சிவலிங்கம் ஒன்றை செய்தார்.

    குறித்த ஒரு லக்கின நேரத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய தாமதம் ஆகலாம்.

    ஆஞ்சநேயர் வருவதற்குள் செய்ய வேண்டி இருந்த காரணத்தால் சீதாதேவி மணலால் பிடித்து வைத்திருந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜையை தொடங்க,

    அகத்திய முனிவர் குறித்த நல்ல நேரம் முடிவதற்குள் இந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டார்.

    பிறகு கொண்டு வந்த ஆஞ்சநேயர் தான் வருவதற்குள் இங்கு மணலால் லிங்கத்தை பூஜை செய்வதைக் கண்ட அவர் கோபமுற்று அது விஷயமாக கேட்க

    ஸ்ரீராமபிரானானவர் அந்த லிங்கத்தை அகற்றிவிட்டு நீ கொண்டு வந்த லிங்கத்தை வை என்று உத்தரவிட்டார்.

    அதைக்கேட்ட அனுமன் தன் வாலினால் சுழற்றி அந்த லிங்கத்தை அகற்ற முயற்சி செய்து, அம்முயற்சியில் தோல்வியுற்று, தன் வால் அறுந்து விழுந்து மயக்கமடைந்தார்.

    பின்னர் ராமபிரானாரால் எழுப்பப்பட்டு, அனுமன் கொண்டு வந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்து அதற்கே முதலில் பூஜை செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.

    பின்னர் தாங்கள் பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்கு பூஜை நடைபெறும் என்று சொன்னார்.

    இவ்வாறு ராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் அன்று முதல் ராமனால் உண்டாக்கப்பட்ட ஈசனை உடைய ஊர் என்ற பொருள் கொண்ட ராமேஸ்வரம் என்ற பெயர் பெற்றது.

    Next Story
    ×